பாதுகாப்பு கோரி ஷானி ரிட் மனு - 5 ஆம் திகதி பரிசீலனை

Published By: Vishnu

30 Nov, 2022 | 09:01 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தனக்கு போதுமான பாதுகாப்பினை வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி,  சி.ஐ.டி. யின்  முன்னாள்  பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர தாக்கல்ச் செய்துள்ள எழுத்தாணை மனுவை ( ரிட்) எதிர்வரும்  டிசம்பர் 5 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (30) உத்தரவிட்டது.

குறித்த மனு புதன்கிழமை (30) மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பரிசீலனையின் போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய,  மனுதாரருக்கு போதுமான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்தார்.

எனினும் அதனை, மனுதாரருக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய நிராகரித்தார்.  தனது சேவை பெறுநரின் பாதுகாப்புக்கு இரு பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் அது முறையாக முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தினார்.

எனவே மனுதாரருக்கு உரிய முறைமையிலான பாதுகாப்பொன்றினை வழங்க உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு ஜனாதிதிபதி சட்டத்தரணி  உபுல் ஜயசூரிய கோரினார்.

முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு வரை ஒத்திவைத்தார்.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால், போதுமான பாதுகாப்பை கோரி, தான்  சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல் ஒன்றினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பிலான அதிகார சபைக்கு முறையிட்டுள்ளதாக மனுதாரர்  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி,  தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க குறித்த அதிகார சபை பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் பரிந்துரைத்துள்ள போதும் இதுவரை முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே போதுமான முறையான பாதுகாப்பை வழங்க உத்தரவிடுமாறு மனுதாரர் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவில்  குற்றச் செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்கள் தொடர்பிலான அதிகார சபை,  மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38