பண மோசடி : டுபாயிலுள்ள திலினியின் வியாபாரம், விசாரணைக்கு இன்டர்போலின் உதவி - நீதிமன்றுக்கு அறிவித்த சி.ஐ.டி

By Digital Desk 2

30 Nov, 2022 | 08:19 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி, கொழும்பு - கோட்டை கிரிஷ் திட்டத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான ஜானகி சிறிவர்தன, திகோ கூறுப் நிறுவன பணிப்பாளர்களில் ஒருவரான கசுன் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் காலம்  நீடிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும்  டிசம்பர் 13 வரை அவர்கைன் விளக்கமரியல் காலத்தை நீக்க  கோட்டை நீதிவான் திலின கமகே புதன்கிழமை ( நவ. 30) உத்தர்விட்டார்.

குறித்த மூவருக்கும் பிணையளிப்பது விசாரணைகளை பாதிக்கும் எனக் கூறி  நீதிவான் அவர்களது பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.

எனினும் இதுவரை விளக்கமறியலில் இருந்து வந்த பொரளை சிறிசுமன தேரர், இசுரு பண்டார  ஆகியோரை பிணையில் விடுவிக்க நீதிவான் அனுமதியளித்தார். 

அதன் பபடி அவ்விருவரும்  தலா 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே  இந்த விவகாரத்தில்  ஜா எல பகுதியைச் சேர்ந்த தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளரான  நல்லையா ஜெயமோகன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில், இந்த 6 பேருக்கும்  எதிராக ஒன்றாகவும் தனித்தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றுக்கு விடயங்களை முன் வைத்த சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரிகள்,  திலினி பிரியமாலிக்கு எதிராக 7 வெவ்வேறு முறைப்பாடுகள் சி.ஐ.டி.யிக்கு கிடைக்கப் பெற்றுள்ள  நிலையில்  அது குறித்து விசாரணைகள்  நடப்பதாக தெரிவித்தனர்.

நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட  உத்தரவுகள் ஊடாக பெறப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை மையப்படுத்தி அவ்விசாரணைகள் தொடர்வதாக அவர்கள் அறிவித்தனர்.

மேலதிக விசாரணைகளில் திலினி பிரியமாலி, டுபாயில் ஆரம்பித்துள்ள  வியாபாரம் ஒன்று தொடர்பில் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வியாபார நடவடிக்கை அவரது பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர்.   

இந் நிலையில் குறித்த வியாபாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸ்  (இன்டர்போல்)  மற்றும் மத்திய வங்கியின் உதவியினை நாடியுள்ளதாக சி.ஐ.டி. அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர். 

அத்துடன் சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக தனியான சார்ட்சி சுருக்கத்தை விசாரணையாளர்கள் மன்றில் முன் வைத்தனர். இந் நிலையிலேயே விடயங்களை  ஆராய்ந்த நீதிவான் இது தொடர்பிலான வழக்கை எதிர்வரும்  டிசம்பர் 13 வரை ஒத்தி வைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09