கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த 'சுயமாக முன்னேறும் மனிதர்கள்' எனும் தொனிப்பொருளிலான திகாமடுல்ல முயற்சியாண்மை வர்த்தக மற்றும் விற்பனை கண்காட்சி பிரதேச செயலாளர் ரி. ஜெ. அதிசயராஜ் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் அனுசரணையோடு நடைபெற்ற இந்த வர்த்தக கண்காட்சியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவிலுமுள்ள சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை விற்பனை கூடாரங்கள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கண்காட்சியை திறந்து வைத்தார்.
இதில் அம்பாறை மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவி பணிப்பாளர் எம்.ஐ.நாசர், கல்முனை தபால் நிலையத்தின் பிரதம தபால் அதிகாரி பி.எம்.அஸ்ஹர்டீன், கல்முனை வடக்கு நிருவாக உத்தியோகத்தர் எம்.ஜீவராஜ், சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ்.இருதயராஜா, அம்பாறை மாவட்ட செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி வியாபார பிரிவு உத்தியோகத்தர் றஜாத், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ. றமீஸ், எஸ்.யதக்சினி, உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM