முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி : சவாலுக்குட்படுத்திய மனு ; டிசம்பர்14 இல் விசாரணைக்கு

Published By: Digital Desk 2

30 Nov, 2022 | 05:31 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முட்டை விற்பனை தொடர்பில் கட்டுப்பாட்டு விலையைகளை நிர்ணயம் செய்து அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை  ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழைமை ( நவ. 30) தீர்மானித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான  பிரசன்ன டி அல்விஸ்,  கே.கே.ஏ.பீ.சுவர்ணாதிபதி ஆகியோரை உள்ளடக்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த மனுவானது  முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நேற்று (நவ. 29) இம்மனுவானது  விசாரணைக்கு வந்த போது, பிரதிவாதிகளுக்காக  அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  சுமதி தர்மவர்தன மன்றில் ஆஜரானார். 

உணவுப் பாதுகாப்பு குழு ஊடாக ,  முட்டை தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளைப் பெற்று  தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய  நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை  நடவடிக்கைஎ டுப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தன குறிப்பிட்டார்.

இந் நிலையில், குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள்,  வழக்கை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37