யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

By Nanthini

30 Nov, 2022 | 05:21 PM
image

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்குக் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றம் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது. 

யாழ் நகர்ப் பகுதியில் 6 பலசரக்கு கடைகள்,  குருநகர் பகுதியில் 5 பலசரக்கு கடைகள் மற்றும் வண்ணார்பண்ணை பகுதியில் ஒரு கடை ஆகிய 12 கடைகளிலும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில், அதன் உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு இன்று புதன்கிழமை (நவ 30) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 12 வர்த்தகர்களும் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

அடுத்து அந்த 12 பேருக்கும் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மேலதிக நீதவான், சான்று பொருட்களாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கவும் - அமெரிக்கா, பிரிட்டன்,...

2023-02-01 22:38:54
news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08