மட்டக்களப்பில் அரச காணிகளை வனவள துறையிடமிருந்து விடுவிப்பது தொடர்பில் விசேட கூட்டம்

By Vishnu

30 Nov, 2022 | 04:04 PM
image

(செய்திப்பிரிவு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான அரச காணிகளை வனவள துறையிடமிருந்து விடுவிப்பது தொடர்பிலான விசேட கூட்டம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 'மாவட்டத்தின் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கென அடையாளம் காணப்பட்ட அரசகாணிகளை வனவள துறையிடம் இருந்து விடுவித்தல்' என்ற தீர்மானத்திற்கு அமைவாக கமத்தொழில் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பங்கேற்புடன் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது நாடளாவிய ரீதியிலுள்ள அரச காணிகளை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை அதிகரிப்பதன் அவசியம் தொடர்பிலும் 2019 ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வனவளத்துறை தொடர்பிலான வர்த்தமானியால் உற்பத்தி மற்றும் விவசாய துறையில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான களவிஜயத்தினை முன்னெடுத்து மேற்குறித்த நோக்கங்களுக்கென அடையாளம் காணப்பட்ட காணிகளை வனவள துறையிலிருந்து விடுவிப்பது என்கின்ற தீர்மானமும் அமைச்சரினால் எட்டப்பட்டது.

இதன் மூலம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் சுமார் 380 ஏக்கருக்கும் அதிகமான இறால் வளர்ப்பு திட்டங்கள், மாவட்டத்தின் பல பாகங்களிலும் செய்கை இடம்பெறாமல் காணப்படுகின்ற 1000 ஏக்கருக்கும் அதிகமான  வயல் காணிகள், கோறளை பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேசசெயலக பிரிவுகளில் அமையவுள்ள  மீன் மற்றும் இறால் வளர்ப்பு திட்டங்கள்  என  பல விவசாய மற்றும் முதலீட்டுத்  திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன்முலம் மாவட்டத்துக்கான வருமானத்தினை அதிகரிக்க முடிவதுடன் பல தொழில் முயற்சிகளையும் இளம் சந்ததியினருக்கு உருவாக்கி கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09