(எம்.வை.எம்.சியாம்)
வெளிப்படைத்தன்மை மற்றும் முறையான நிதி கட்டமைப்பு மூலம் ஊழலை தவிர்த்து சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறலாம் என்றும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுசாமி தெரிவித்துள்ளார்.
தெற்காசிய முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வருமான அடிப்படையில் நிதி ஸ்திரத்தன்மை, எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவுகளுக்கு அடிப்படையிலான விலை நிர்ணயம்,பொது பாதுகாப்பை செயல்படுத்துவதன் மூலம் நாணயப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல், தரவு சார்ந்த நிதிக்கொள்கையை உருவாக்குதல் மற்றும் நெகிழ்வான பணவீக்க விகிதங்களை பராமரித்தல், சந்தை அடிப்படையிலான மாற்று விகிதத்தில் அந்நிய கையிருப்பை உருவாக்குதல், வங்கி அமைப்பினை கவனம் செலுத்துவதோடு நிதி அமைப்பைப் பாதுகாப்பதாகும், வெளிப்படைத்தன்மை மற்றும் முறையான நிதி மேலாண்மை மூலம் ஊழலை தவிர்த்து சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்று கொள்ளலாம்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியுடன் எங்களுக்கு பாதுகாப்பான நிதி அடித்தளத்தை கட்டியெழுப்ப முடியும். இதனை நாம் கட்டாயம் செயற்படுத்த வேண்டும். மேலும் ஆசியா அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ஜப்பான் உள்ளிட்டவர்கள் எமக்கு இதனையே உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி எதிர்வரும் ஜனவரியில் கிடைப்பதற்குள்ளது. மேலும் நாட்டில் உள்ள வங்கிகளுக்கு நிதி பெறுவனவுகள் மற்றும் கடன் நிதி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும். தற்போது முடங்கியுள்ள நிதி பரிவத்தனைகளைகளும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிதியுதவியுடன் மீளவும் திறந்து விடப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM