தனியாக உணவு உட்கொண்டால் இதயக்கோளாறு நிச்சயமாம் : ஆய்வின் தகவல்

By Digital Desk 2

30 Nov, 2022 | 04:26 PM
image

எவரது துணையும் இல்லாமல் தனியாக ஒருவர் உணவு உட்கொள்ளும் பழக்கம் கொண்டிருந்தால் அது இதயக் கோளாறை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக பெண்களுக்கு இதய பாதிப்பை உண்டாக்கும் என்றும் புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

verywell fit என்ற நிறுவனத்தின் தரவுகளின் படி, தினந்தோறும் தனிமையில் உணவும் உண்ணும் பெண்கள், கூட்டாக சேர்ந்து சாப்பிடும் பெண்கள் என 65 வயது வரையுள்ள 590 பெண்களை இரண்டு குழுக்களாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

அதில், தினசரி தனியாக உணவு உட்கொள்ளும்  பெண்களுக்கு ஆஞ்சினா (angina) என்ற இதயத்துக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கும் கரோனரி இதயக் கோளாறை 2.58 மடங்கு அதிகம் வர வைக்கிறது என தெரிய வந்திருக்கிறது. இதுபோக தனியாக உணவு உட்கொள்வதால் ஏற்படும் இதர பிரச்சினைகளையும் குறிப்பிட்டிருக்கிறது.

அதன்படி, எப்போதும் தனியாக உணவு உட்கொள்ளும்  பழக்கம் உள்ள பெண்களுக்கு அதிகளவிலான உணவை உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்றும், இப்படியாக அதிகளவில் உணவு உட்கொண்டால் எடை கூடுவதோடு, நீரிழிவும், உயர் இரத்த அழுத்தத்துக்கான அபாயத்தையும் அதிகரிக்கச் செய்கிறதாம்.

இதனையடுத்து, எவரது துணையும் இல்லாமல் தனியாக உணவு உட்கொள்ளும் பழக்கமுடைய பெண்களுக்கு மனச்சோர்வு உண்டாகிறதாம். ஏனெனில் இயற்கையாக, தனியாக உணவு உட்கொள்ளும்போது தனிமை உணர்வை ஏற்படச் செய்துவிடுகிறது.

ஆகவே, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் மனச்சோர்வின் அபாயங்களைக் குறைக்க, பல வழிகள் உள்ளன. அவற்றில் குறிப்பாக, புகைப்பிடித்தல் கூடாது, மதுக் குடிப்பதை குறைக்க வேண்டும், தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மனநலனை பேணிக் காப்பது ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹைபர்டிராபிக் அப்ஸ்ட்ரக்டிவ் கார்டியோமயோபதி எனும் திடீர்...

2023-02-08 12:27:00
news-image

தொண்டையில் கிச்...கிச்.... தொந்தரவா.....?

2023-02-08 12:18:50
news-image

அம்ப்ளிக்கல் கிரானுலோமா எனப்படும் தொப்புள் கட்டி...

2023-02-07 15:36:13
news-image

குடல் எரிச்சல் பாதிப்பை ஃபுட்மாப் (FODMAP)...

2023-02-06 13:47:17
news-image

அயோட்டிக் டிஸெக்ஷன் எனப்படும் இதய தமனி...

2023-02-04 13:31:54
news-image

மூளை கட்டி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2023-02-02 16:56:07
news-image

பிரபலமடைந்து வரும் யெயர்த்திங் தெரபி

2023-02-01 17:35:35
news-image

குழந்தைகளுக்கு குறட்டை வருவது ஏன்?

2023-02-01 11:51:33
news-image

இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின்...

2023-02-01 11:09:27
news-image

ஸ்கின் கிராப்டிங் எனப்படும் தோல் பொறுத்தும்...

2023-01-31 16:23:50
news-image

குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

2023-01-30 12:35:06
news-image

ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க பக்கவாதப்...

2023-01-30 11:30:54