சீனாவின் தென்பகுதி நகரில் கொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Published By: Rajeeban

30 Nov, 2022 | 02:47 PM
image

சீனாவின் தென்பகுதி நகரமான குவாங்சோவில் கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிராக மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கண்ணாடிப்போத்தல்களையும் கற்களையும்எறிவதையும் கலகமடக்கும் பொலிஸார் அதிலிருந்து தப்ப முயல்வதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் இழுத்துசெல்லப்படுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

ஹைசுமாவட்டத்தில் செவ்வாய்கிழமை இரவு முதல் புதன்கிழமை வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹைஜூவில் உள்ள ஹ_ஜியாவோ கிராமத்தில் 100க்கும் மேல் பொலிஸாரை பார்த்ததாகவும் மூவர் கைதுசெய்யப்படுவதையும் பார்த்ததாகவும் குவாங்சூ  கிராமத்தை சேர்ந்த  நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத ஆரம்பத்திலும் இந்த நகரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-17 17:45:07
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40