கவனயீணமாக பஸ்களை செலுத்து பொது மக்களின் உயிருடன் விளையாடும் பஸ் சாரதிகள் தொடர்பில் வேடிக்கை பார்க்க முடியாது . எனவே பாரிய குற்றங்களுக்கு தண்டப்பணம் அதிகமாக விதிப்பது தொடர்பில் எமக்கு பிரச்சினையில்லை.  ஆனால் அவை உரிய வகையில் நீதிமன்றம் ஊடாக முன்னெக்க வேண்டும் என்பது தொடர்பில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்னாண்டோ தெரிவித்தார். 

தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினை மற்றும் போக்குவரத்துத் துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட  விசேட குழு சந்திப்பு இன்று பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியது. 

இந்த சந்திப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலேயே சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்னாண்டோ  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.