(நெவில் அன்தனி)
அரசியலில் தனது பரம வைரியான ஈரானை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஐக்கிய அமெரிக்கா இரண்டாவது சுற்றான நொக் அவுட் சுற்றில் நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது.
அல் துமாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற அப் போட்டியின் 38ஆவது நிமிடத்தில் கோல் போட்டு அமெரிக்காவின் ஹீரோவான கிறிஸ்டியன் பியூலிசிக், பின்னர் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
பியூலிசிக் கோல் போட்ட சொற்ப நேரத்தில் ஈரான் கோல்காப்பாளர் அலிரீஸா பெய்ரான்வண்டுடன் மோதுண்டதால் அவரது வயிற்றுப் பகுதியில் அடிபட்டு கடும் உபாதைக்குள்ளானர்.
இடைவேளையுடன் நீக்கப்பட்ட அவர் போட்டி முடிவில் வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.
அவரது ஆரோக்கிய நலனுக்காகவே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக அமெரிக்க பயிற்றுநர் க்றெக் பேர் ஹோல்ட்டர் தெரிவித்தார்.
அப் போட்டியின் இடைவேளைக்கு முன்னரான உபாதையீடு நேரத்தில் அமெரிக்கா இரண்டாவது கோலைப் போட்டது. ஆனால், உதவி மத்தியஸ்தர் கொடியை உயர்த்தி ஓவ் சைட் என சமிக்ஞை கொடுத்ததால் அந்த கோல் நிராகரிக்கப்படடது.
இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய ஈரான் கோல் நிலையை சமப்படுத்த முயற்சித்து அதில் தோல்வி கண்டது.
குறிப்பாக அதன் முன்கள வீரர் ரீஸாயியன் குறைந்தது 5 தடவைகள் கோல் போட எடுத்த முயற்சிகள் வீண் போயின.
போட்டியின் கடைசி செக்கன்களில் கோல் போடுவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சியும் கைகூடாமல் போக ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஈரானியர்களுக்கு பலத்த ஏமாற்றம்
இப் போட்டி முடிவு ஈரானியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
24 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கிண்ண முதல் சுற்றில் அமெரிக்காவை 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட ஈரான், மீண்டும் வெற்றிபெறும் என ஈரான் இரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால், அமெரிக்கா இறுக்கமான வெற்றியை ஈட்டி அந்தத் தோல்வியை நிவர்த்தி செய்துகொண்டது. அத்துடன் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து ஈரான் வெளியேறியது.
வேல்ஸுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஈரான் வெற்றிபெற்றதும் ஈரானில் இரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதை மீண்டும் காணக்கிடைக்கவில்லை.
போட்டியின் 38ஆவது நிமிடத்தில் ரஷ்போர்ட் போட்ட கோலுடன் ஈரான் இரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக சொகத்துடன் காணப்பட்டனர்.
மேலும் உலக கால்பந்தாட்ட அரங்கில் மற்றெல்லா கால்பந்தாட்டப் போட்டிகளையும் விட அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி மிக முக்கிய போட்டியாக அமைந்தது. ஏனெனில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்தங்களாக இருந்துவரும் இருதரப்பு பகைமையே இதற்கு காரணம்.
ஆனால், அல் துமாமா விளையாட்டரங்கில் இரண்டு அணிகளினதும் வீரர்கள் நட்புறவுடன் விளையாடியது முழு உலகுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM