சிக்கன் நெய் ரோஸ்ட்

Published By: Devika

30 Nov, 2022 | 12:14 PM
image

தேவையான பொருட்கள்

சிக்கன் - ½ கிலோ 

இஞ்சி, வெ.பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

சீனி - 1 டீஸ்பூன் 

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் 

மசாலா - 1 டீஸ்பூன் 

சீரகப் பொடி - 2 டீஸ்பூன் 

மல்லித் தூள் - 2 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

வரமிளகாய் - 2 

கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் 

அரைத்த தக்காளி - 1 கப் 

நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன் 

கொத்தமல்லி – ½ கப் (நறுக்கியது) 

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை: 

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறி­வேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி, வெ.பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும். 

பின்னர் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கிய பின் மல்லித்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும். 

நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து சிக்கன் துண்டுகள், உப்பு, மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் ½ கப் கொத்தமல்லியைத் தூவி, சீனி சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

பின் மூடியைத் திறந்து அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்து நெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்