2021 இல்முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களிற்காக அரசாங்கம் 44 மில்லியனை செலவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலகமும் பிரதமர் அலுவலகமும் வழங்கிய தகவல்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் மேற்கொண்ட ஐந்து வெளிநாட்டு பயணங்களிற்காக ராஜபக்ச சகோதரர்கள் 44, 739,184.91 ரூபாயை செலவிட்டனர் என்பது தகவல் உரிமை மூலம் தெரியவந்துள்ளது.
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இது குறித்த விபரங்கள் ஜனவரியில் கோரப்பட்டவேளை ஜனாதிபதி செயலகமும் பிரதமர் செயலகமும் ஆரம்பத்தில் இவற்றிற்கான வேண்டுகோளை நிராகரித்திருந்தன.
எனினும் தகவல் உரிமை ஆணைக்குழு இது குறித்த மேல்முறையீட்டை ஆராய்ந்ததுடன் ஜனாதிபதி செயலகத்தையும் பிரதமர் அலுவலகத்தையும் இது குறித்த விபரங்களை பத்திரிகையாளர்களிற்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகள் இரண்டு மூன்று வாரங்களில இது குறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என்ற போதிலும் கிட்டத்தட்ட பத்துமாதங்களின் பின்னர் அதிகாரிகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இரு தலைவர்களினதும் வெளிநாட்டு பயணங்களிற்காக செலவான 44 மில்லியனில் 36 மில்லியனை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இரண்டு வெளிநாட்டு பயணங்களிற்காக செலவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டபாய தனது மூன்று வெளிநாட்டு பயணங்களிற்கு ஏழு மில்லியனை செலவிட்டுள்ளார்- அதாவது முழு செலவுகளில் 83 வீதம் முன்னாள் பிரதமருடையது.
நியுயோர்க் கிளாஸ்கோ ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றிற்கான முன்னாள் ஜனாதிபதியின் செலவு Rs.7,768, 320.77 எனினும் அவரது விஜயத்தின் நோக்கம் குறித்து ஜனாதிபதி செயலகம் எந்த தகவலையும் வழங்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதியின் நியுயோர்க் விஜயத்திற்கான செலவு 5,461,221.71
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM