3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி : சீனாவில் விநோதம்!

By Digital Desk 2

30 Nov, 2022 | 11:47 AM
image

சீனாவில் சிறுமி ஒருவரின் வயிற்றிலிருந்து 3 கிலோ தலைமுடியை லைத்தியர்கள் அறுவைசிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.

சிறுமிக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் உணவு உண்ண முடியாமலும் தலை வழுக்கையாய் போயுள்ள காரணத்தால் அவரது உறவினர்கள் சீனாவில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் சிறுமியின் வயிற்றுக்குள் ஏராளமான தலைமுடி இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் இருந்து தலைமுடியை அகற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு சிறுமியின் வயிற்றுக்குள் முடி இருந்ததால் அந்த சிறுமியால் உணவு உட்கொள்ள முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் வயிற்றுக்குள் இருந்து முடியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார்கள். எதனால் இப்படி நேர்ந்தது என்பது குறித்து ஆராய்ந்த போதுதான் விபரீதமான உண்மை தெரியவந்துள்ளது.

 அந்த சிறுமி தனது தலைமுடியை தானே பிய்த்து உட்கொண்டுள்ளார். இதனால் அவரது தலை வழுக்கையாகியுள்ளது. தனது தலைமுடியை தானே பிய்த்து உட்கொண்டதால் வயிற்றுக்குள் சென்ற தலைமுடி செரிமானம் ஆகாமல் வயிற்றை அடைத்துக் கொண்டு இருந்துள்ளது. இதனால் உணவு உள்ளே செல்ல வழியில்லாமல் உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். 

ஏன் அந்த சிறுமி தனது தலைமுடியை தானே உட்கொண்டார் என்பதற்கும் வைத்தியர்கள் காரணத்தை கண்டறிந்திருக்கிறார்கள்.

ஷான்சி இமாகாணத்தை சேர்ந்த அந்த சிறுமிக்கு ‘பிகா’ என அழைக்கப்படும் விநோத பழக்கம் இருந்துள்ளது. அதாவது இந்தப் பழக்கம் உள்ளவர்கள் அசாதாரணமான, சாப்பிடக் கூடாத பொருட்களை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் அழுக்கு, காகிதம், களிமண் போன்ற பொருட்களை விரும்பி உண்ணுவார்கள். பொதுவாக இந்த மனநிலை கர்ப்பிணி பெண்களுக்கு அதிகம் ஏற்படும். அதிலும் குறிப்பாக அந்த சிறுமிக்கு டிரிகோடிலோமேனியா என்கிற தனது தலைமுடியை பிய்த்து தானே உண்ணும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தாய் தந்தை வெளியூரில் வேலை பார்த்து வருவதால் சிறுமி தனது  தாத்தா- பாட்டி கண்காணிப்பில் இருந்துள்ளார். கண்காணிக்க யாரும் இல்லாததால் சிறுமிக்கு இந்தப் பழக்கம் இருந்ததை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆபத்தான நிலைக்கு சிறுமி தள்ளப்பட்ட பிறகே இந்த விநோத பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த முடி அகற்றப்பட்ட பிறகு சிறுமிக்கு மற்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறுமிக்கு இருக்கும் அந்த விநோத பழக்கவழக்கத்தில் இருந்து சிறுமியை மீட்பதற்கான உளவியல் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, அவர்களின் நடவடிக்கைகள், பழக்கவழக்கங்களை நாம் கண்காணித்தால் இது போன்ற பேராபத்துக்களில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றி விடலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரீட்சை மண்டபத்தில் 500 மாணவிகளுக்கு மத்தியில்...

2023-02-02 15:39:46
news-image

நிச்சயதார்த்தத்தின்பின் திருமணம் செய்ய மறுத்த பெண்...

2023-02-02 13:52:05
news-image

அதிவேக ரயிலில் குழந்தை பிரசவித்த பயணி:...

2023-01-30 17:18:40
news-image

370 கிலோ காரை தனது உடலால்...

2023-01-30 09:44:33
news-image

15 வயது சிறுமியாக நடித்து, பாடசாலை...

2023-01-27 10:04:10
news-image

அபுதாபி அரச குடும்ப ஊழியராக காட்டிக்கொண்ட...

2023-01-17 16:24:01
news-image

ஒரு நபரால் உருவாகிய 71 குழந்தைகள்

2023-01-13 15:35:42
news-image

புது வருடம் - பயோடேட்டா

2023-01-09 14:01:43
news-image

வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்...

2023-01-07 14:50:22
news-image

சீன ஆற்றில் ஐஸ் பூக்கள்

2023-01-02 14:14:14
news-image

ஆபத்தான வகையில் மோட்டார் சைக்களில் பயணித்த...

2022-12-30 13:07:47
news-image

102 பிள்ளைகளுக்கு தந்தையான பின் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு...

2022-12-27 13:17:42