சூர்யாவின் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜெய் பீம்'.
இதன் இரண்டாம் பாகம் தயாராகிறதா..? என பலர் வினா எழுப்ப, அதற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா தயாரித்து நடித்த 'ஜெய் பீம்' திரையிடப்பட்டது.
இதன் போது படத்தின் இயக்குநர் ஞானவேல் மற்றும் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், '' ஜெய் பீம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும். சட்டத்தரணி சந்துரு இது போன்ற ஏராளமான வழக்குகளை எதிர் கொண்டிருக்கிறார். அவரின் பங்களிப்புடன் விரைவில் 'ஜெய் பீம் 2' தயாராகும்'' என்றார்.
'ஜெய் பீம்' திரைப்படம், ஒரு கலை படைப்புக்குரிய சமூக ரீதியான தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்திய டிஜிட்டல் படைப்பு என்ற அங்கீகாரத்தை பெற்றிருப்பது தனி சிறப்பு.
மேலும் இத்திரைப்படத்தின் காட்சிகள், ஆஸ்கார் விருது போன்ற சர்வதேச அளவிலான விருது வழங்கும் தளங்களிலும் இடம்பெற்றிருப்பது, கூடுதலான கவனத்தைப் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM