அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் 'துணிவு' படத்தினைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச். வினோத்- அஜித்குமார் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் 'துணிவு'.
வட இந்திய மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நிஜ வங்கி கொள்ளை சம்பவத்தை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக 'அசுரன்' பட புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, வீரா, ஜான் கோக்கன், அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவுச் செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
வங்கி கொள்ளையை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பே வியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி நிறுவனத்தின் சார்பில் பிரபல பொலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. மேலும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கிய படக் குழு, நேற்றுடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது என தெரிவித்திருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என இரண்டு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றன. இந்நிலையில் இயக்குநர் வினோத், 'துணிவு' திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டரில் அஜித் குமாரின் எக்சன் அவதாரம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.
பொங்கல் திருவிழா விடுமுறையின் போது வெளியாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தின் புதிய போஸ்டரை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM