அவன் விடுவதாயில்லை!

Published By: Ponmalar

30 Nov, 2022 | 03:52 PM
image

கேள்வி: 
நான் ஒரு பெண். வயது 22. எனது பெரியப்பாவின் மகன் என்னை காதலிக்கிறான். ஆரம்பத்தில் நானும் அவனை காதலித்தேன். ஆனால், என் தோழியிடம் இதுபற்றி கூறியபோது இது தவறானது, திருமண உறவில் சிக்கல் வரும் என்று கூறியதால் விலக ஆரம்பித்தேன். ஆனால், அவன் விடுவதாக இல்லை. இப்போது அவன் தனியாக வெளிநாட்டில் இருப்பதால், தவறான முடிவு ஏதும் எடுத்துவிடுவானோ என்ற பயத்தால் ஒரேயடியாக வெறுக்க முடியவில்லை. அவன் மீது அன்பும் அக்கறையும் கொண்ட எனக்கு இந்த பிரச்சினையை தீர்க்க வழி சொல்ல முடியுமா?

பதில்: 
காலம் சிறந்த அருமருந்து! அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதும் நன்மைக்கே. அவருடனான தொடர்பாடலை அது எந்த வழியில் இருந்தாலும் - கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துவிடுங்கள். 

படிக்கிறேன், வேலைக்குச் செல்கிறேன் என்று ஏதோவொன்றைச் சொல்லி அவரைத் தவிருங்கள். அப்படியே கதைக்கும் சூழல் ஏற்பட்டாலும், மேம்போக்காக பேசுங்கள். காதல் பற்றிய பேச்சை அவர் எடுத்தால், 'முதலில் நீ போன காரியத்தைப் பார். மற்றது அப்புறம் பேசலாம்’ என்ற ரீதியில் சற்று விட்டேத்தியாக பேசுங்கள்.

உங்கள் பேச்சும் தொனியும் அவரைத் தவிர்க்க விரும்புவதாக அமையட்டும். அவர் மீது அன்பு, அக்கறை இருந்தாலும், உங்கள் இருவரதும் உறவு தொடர்ந்தால், இரு வீட்டாருக்கும் நீங்காத களங்கம் ஏற்பட்டுவிடும் என்று சொல்லுங்கள்.

அப்படியும் அவர் வற்புறுத்தினால், அவர் விரும்புவது உங்கள் மனதையா, உடலையா என்று கேட்டுவிடுங்கள். அன்பை வெளிப்படுத்த திருமணம் தான் முடிக்க வேண்டும் என்பதில்லை. அக்கா - தம்பியாகவோ, அண்ணன் - தங்கையாகவோ கூட அன்பை வெளிப்படுத்தலாம் என்று கூறுங்கள்.

இதை சொல்லிப் பாருங்கள். நீங்கள் சொல்வது போல தவறான முடிவுகளுக்கு அவர் போக மாட்டார் என்று நம்பலாம்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right