வேல்ஸை வென்ற இங்கிலாந்து 2ஆம் சுற்றில் செனகலை சந்திக்கிறது

By Digital Desk 5

30 Nov, 2022 | 10:28 AM
image

(நெவில் அன்தனி)

மார்க்கஸ் ரஷ்போர்ட் , ஃபில் ஃபோடன் ஆகிய இருவரும் போட்ட கோல்களின் உதவியுடன்  தனது அயல்நாடான வேல்ஸை 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இங்கலாந்து, உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றில் செனகலை எதிர்த்தாடவுள்ளது.

இந்த வெற்றியுடன் பி குழுவில் 7 புள்ளிகளுடன் தோல்வி அடையதாக அணியாக இங்கிலாந்து முதலாம் இடத்தைப் பெற்றது.

அஹ்மத் பின் அலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (29) இரவு நடைபெற்ற அப் போட்டிக்கு பயிற்றுநர் கெரத் சவுத்கேட்டினால் இணைத்துக்கொள்ளப்பட்ட ரஷ்போர்டும ஃபோடனும் தங்களது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர்.

போட்டியின் முதலாவது பகுதியில் இங்கிலாந்து கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகளை வேல்ஸ் தடுத்த வண்ணம் இருக்க இடைவேளையின்போது கோல் எதுவும் போடப்பட்டிருக்கவில்லை.

எனினும் இடைவேளைக்குப் பின்னர் 50, 51ஆவது    நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களைப் புகுத்தி இங்கலாந்து முன்னிலை அடைந்தது.

முதலாவதாக இங்கிலாந்துக்கு கிடைத்த ப்றீ கிக் மூலம் ரஷ்போர்ட் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார். ப்றீ கிக் மூலம் இங்கிலாந்துக்காக ரஷ்போர்ட் போட்ட முதலாவது கோல் இதுவாகும்.

அத்துடன் இந்த வருட உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ப்றீ கிக் மூலம் போடப்பட்ட முதலாவது கோலாகவும் அது அமைந்தது.

இந்த கோலினால் உற்சாகம் அடைந்த இங்கிலாந்து அடுத்த நிமிடமே மேலும் ஒரு கோலைப் போட்டது.

இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேன் பரிமாறிய பந்தை ஃபோடேன் 6 யார் கட்டத்தின் விளிம்பிலிருந்தவாறு இலகுவாக கோலாக்கினார்.

போட்டியின் 68ஆவது நிமிடத்தில் பிலிப்ஸ் பரிமாறிய பந்தை பெற்றுக்கொண்ட ரஷ்போர்ட் மூன்று எதிரணி வீரர்களைக் கடந்து சென்று மிகவும் அருமையான கோலைப் போட்டு இங்கிலாந்தின் கோல எண்ணிக்கையை 3 ஆக உயர்த்தினார்.

உலகக் கிண்ண இறுதிச் சுற்று வரலாற்றில் இங்கிலாந்தின் 100ஆவது கோலாக அது அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல்...

2023-02-02 10:31:01
news-image

55 வயதில் போர்த்துகல் கழகத்தில் விளையாட...

2023-02-02 10:04:53
news-image

துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்...

2023-02-02 09:44:41
news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53