சுற்றுலா பண்டிகையின் பருவ காலத்துடன் கொழும்பு நகரை, இவ்வருடத்தின் டிசம்பர் மாதத்தின் 20 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதி வரை ஒரு சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒரு புதுமையான நகராக மாற்றுவதற்காக எல்லாப் பங்கங்களிலிருந்தும் செயல்முறைக்கு உகந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத மற்றும் விவகாரங்களுக்கான அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் சுற்றுலாத் துறையானது இந்த டிசம்பர் மாதத்தில் சுற்றுலாத்துறை பண்டிகை விழாவின் இரண்டாவது கட்டத்தை செயற்படு்த்த திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த அருமையான அரிதான நிகழ்வுக்குப் பின்னால் உள்ள திட்டமென்னவென்றால் சுற்றுலாப் பருவ காலம் உச்ச நிலையிலுள்ள வேளையில் ஒரே இடத்தில் இலங்கையின் உணவு, கலாசாரம், இரத்தினக்கல், கைத் தொழில் பொருட்கள், தேயிலை, வியாபாரம் மற்றும் பொழுது போக்குகள் என்பவற்றை தௌிவாக விளங்குவதாகும்.

இலங்கை சுற்றுலாத்துறை மூலங்களின் அறிக்கையின்படி கடைசியாக நடந்த சுற்றுலா பண்டிகை விழாவை விட இவ்வருட சுற்றுலா பண்டிகை விழா பெரியதாகவும், சிறப்பானதாகவும் காணப்படும்.

2016 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா பண்டிகை விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுற்றுலா அபிவிருத்தி, கிறி்ஸ்தவ மத மற்றும் காணி விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோரால் இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும். அதேவேளை இம் மாதம் 23 ஆம் திகதி இடம்பெறும் குறித்த நிகழ்வின் இறுதி வைபவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவார்.

குறித்த நான்கு நாள் நிகழ்விற்கும் பிரதம அதிதிகள் மற்றும் ராஜதந்திர அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட பிரமுகர்களின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாப் பண்டிகை விழாவானது சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் திட்டமாகும்.

சுற்றுலா பருவ காலத்திலே வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் நகர ஹோட்டல்கள் நிரம்பியிருக்கும் போது சுற்றுலாத்துறையுடன் தொடர்பான நெறிப்படுத்தப்பட்ட இவ்வாறான நிகழ்வொன்று இல்லாததை உணர்ந்த அமைச்சர், எல்லா சுற்றுலாத்துறை பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கும் முகமாக பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய நிகழ்வொன்றை ஒழுங்கு செய்ய தீர்மானித்தார். குறித்த நிகழ்வானது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இராணுவ வீரர்கள் மற்றும் இசைக் குழுவின் இடைவிடாத பொழுது போக்குகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கி இருக்கின்றது.

அதேவேளை நகரத்தை சூழவுள்ள பிரதேசங்களை பிரகாசிக்கச் செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான அமைச்சு எல்லா நிறுவன துறைகளுக்கும் சுற்றுலா பருவகால பண்டிகையின் போது தமது கட்டிடங்களை ஔிபெறச் செய்யுமாறு வேண்டிக் கொண்டது.

இந்த நிகழ்வின் விளைவாக 2016 ஆம் ஆண்டின் சுற்றுலாப் பருவகால பண்டிகையின் போது கொழும்பு நகரானது ஔிபெற்று உலகிலுள்ள முக்கிய நகரங்களுடன் போட்டியிடக்கூடிய வகையிலான ஒரு உயிரோட்டமான சூழல் உருவாக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“எனது எண்ணம் என்னவென்றால் நாட்காட்டி அடிப்படையில் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதாகும். அப்போதுதான் எமது நாட்டை தரிசிக்க முடியுமான பொழுதுபோக்கு, உல்லாச நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம். நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொழும்பு நகரிலே சூரியன் அஸ்தமித்தால் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை எனக்  கூறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியானது சுற்றுலாப் பயணிகளுக்கு அவசியமான உல்லாசங்களை, பொழுது போக்குகளை வழங்குவதோடு எமது சுற்றுலாத்துறை கவர்ச்சியையும் மேம்படுத்துகிறது” என அமைச்சர் ஜோன் அமரதுங்க 2016 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா பருவகால பண்டிகையின் நோக்கம் தொடர்பில் தெரிவித்திருந்தார்.

நான்கு நாள் நிகழ்வின்போது நிறைவேற்றப்பட விருக்கும் நிகழ்வுகளாக இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் படைகளின் பாண்ட் வாத்திய நிகழ்வுகள், பல்வேறுபட்ட குழு இசைநிகழ்ச்சிகள், கிறிஸ்தவ பக்திப் பாடல் நிகழ்வுகள், பூர்வீக விளையாட்டுக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் என்பன உள்ளன.

மேலும் சுதந்திர சதுக்கத்தின் சூழலை சிறுவர்களுக்காக விஷேடமாக தயாரிக்கப்பட்ட உல்லாசப்பகுதியாக அமைத்துள்ள அதேவேளை, இளம் வயதினருக்கு முழுமையான பொழுது போக்கை வழங்கும் சூழலாக அமைந்துள்ளது. இதேவேளை, உலகின் பல்வேறு விதமான வியாபாரப்பண்டங்களை உள்ளடக்கிய சந்தையிலே பெரியவர்கள் பொருட்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர்.

குறித்த செயற்திட்டங்களுக்கு வாசனைதரும் வகையில் குறித்த சுற்றுலா பண்டிகையானது கொழும்பிலுள்ள பிரதான நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உணவு மற்றும் பானங்களை உள்ளடக்கி இருக்கும் அவைகளில் இலங்கையின் பல்வேறுபட்ட சமையல்கள் பற்றி தரிசிப்பவர்களை கற்பதற்கும் அனுபவம் பெறுவதற்குமான ஏற்பாடுகளும் அனுபவம் பெறுவதற்குமான ஏற்பாடுகளும் காணப்படுகின்றன.

மேலும் சர்வதேச சமையல்களாக மன்கோலியன, அராபி, சைனா, மலேசியா, தாய்லாந்து, கொரியா, இத்தாலி, இன்தியா, ஜபான், இந்தேனேசியா மற்றும் ஏனைய விசேட சுவையான உணவுகள் விலைக்கு விற்கப்படும்.

மேலும் இலங்கை தேயிலை சபை, தேயிலையை சுவைப்பதற்கான ஒரு மத்திய நிலயைத்தை செயற்படுத்தும். அதில் இலங்கைக்கு உள்ள பல்வேறு விதமான தேயிலை வகைகள் காட்சிப்படுத்தப்படும்.

இலங்கையின் கலாசாரம் மற்றும் புராதனவியலை வெளிப்படுத்தும் வகையில் போடோ பிரதிகள், செயற்கை பிரதிகள் மற்றும் புத்தகங்கள் மூலம் காட்சிப்படுத்தி கலாசார மத்திய நிலையத்தால் வெளிக்காட்டப்பட்ட காட்சிப்படுத்துகை சுற்றுலாப் பயணிகளை கவரும் மிக முக்கிய விடயமாக காணப்பட்டது.

மாணிக்கம் மற்றும் ஆபரணங்களுக்கான அதிகாரசபை இலங்கையின் மாணிக்கங்களை காட்சிப்படுத்தி ஒரு கண்காட்சியை ஒழுங்கு செய்யும். அங்கு விற்பனையாகாது மீதமாகவுள்ள மாணிக்க வகைகள் குறைந்த விலையில் விற்கப்படும். மிருகவியல் திணைக்களமும், காட்டு விலங்குகளின் வாழ்க்கை தொடர்பான திணைக்களமும் வனவியல் வாழ்கை மற்றும் இலங்கையின் மிருகவியல் தொடர்பான காடுகள் பூங்காக்கள் பற்றிய கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும். அது உண்மையில் காட்டு விலங்குகளின் வாழ்கை பற்றி விருப்பமுள்ளவர்களுக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.

கொழும்பின் சில தெரிவு செய்யப்பட்ட ஹோட்டல்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளை, கிறிஸ்தவப் பாட்டு, மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம்பெறும் அந்த அரங்குகளுக்கு வருவதற்கும், அங்கிருந்து திரும்ப செல்வதற்கும் “Colombo City Tour” இனால் இரண்டு தட்டு பேரூந்து ஏற்பாடு செய்யப்படும்.

2016 ஆம் ஆண்டின் சுற்றுலாப் பருவகால பண்டிகையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இராஜதந்திரிகள் மற்றும் உயர் சமுதாயங்களுக்கு சிறந்த உணர்வையும் கொண்டாட்ட உணர்வையும் நிச்சயம் வழங்கும் என்பதுடன் சுற்றுலா முன்னேற்றத்திற்கும் ஒரு தனித்துவமான பாதையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.