நடமாடும் உடல் மசாஜ் சேவை என பேஸ்புக்கில் விளம்பர செய்தவர்களால் தாக்கப்பட்டு, உடைமைகளை இழந்த இளைஞர் : களுத்துறையில் சம்பவம் !

Published By: Vishnu

29 Nov, 2022 | 04:53 PM
image

நடமாடும்  உடல் மசாஜ் சேவைகளை வழங்குவதாக கூறி பேஸ்புக்கில் விளம்பரம் செய்து தம்முடன் தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவரை களுத்துறை கடற்கரைக்கு அழைத்து தாக்கி,  கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை வடக்கு மற்றும் வஸ்கடுவ பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்கள் பேஸ்புக் பக்கத்தில் பெண்களைப் போன்று வேடமணிந்த இவர்கள் தாம்  நடமாடும் உடல் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்துள்ளனர்.

இதன்போது  அவர்களுடன் தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவரை களுத்துறை கடற்கரைக்கு அழைப்பித்து அவரைக் கடுமையாக தாக்கிய பின்னர் அவரது  மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தை அபகரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வஸ்கடுவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேக நபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உடைந்துபோன பாலத்தில்...

2024-05-26 11:15:02
news-image

பக்கச்சார்பானது; குறைபாடுடையது - ஐ.நா. மனித...

2024-05-26 10:53:24
news-image

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக பொதுவெளியில்...

2024-05-26 10:50:30
news-image

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி 

2024-05-26 10:31:50
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை...

2024-05-26 10:43:10
news-image

ஜனாதிபதி தலைமையில் பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள்...

2024-05-26 10:31:19
news-image

13ஐ அமுல்படுத்துவதற்கு தாதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுங்கள்...

2024-05-26 09:52:28
news-image

தமிழ் வேட்பாளரை நிறுத்தும் ஒற்றுமை தமிழ்...

2024-05-26 08:01:56
news-image

ஹப்புத்தளையில் வீட்டின் மீது மரம் முறிந்து...

2024-05-26 07:55:58
news-image

வவுனியாவில் யானையுடன் மோதி தடம்புரண்ட ரயில் ...

2024-05-26 07:49:53
news-image

இன்றைய வானிலை

2024-05-26 07:06:30
news-image

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்பதை...

2024-05-25 23:31:28