bbc
கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிராக சீனாவில் கடந்த ஒரு வாரகாலமாக காணப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தணிந்துள்ளன.
அதேவேளை அரசாங்கம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பல நகரங்களில் பெருமளவு பொலிஸ் பிரசன்னத்தை காணமுடிவதாகவும் சில ஆர்ப்பாட்ட முயற்சிகள் ஒடுக்கப்பட்டதாகவும் வெற்றிபெறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின்றன.
பொதுமக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை அவர்களது கையடக்க தொலைபேசிகள் சோதiனையிடப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் வெளிநாடுகளில் சீன மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர் உலகின் பல நகரங்களில்; ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
மேற்கு சீனாவின் உரும்கி நகரில் உள்ள உயர்மாடிக்கட்டிடமொன்றில் தீப்பிடித்து பத்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கடந்த வார ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.
கொவிட் கட்டுப்பாடு காரணமாக பொதுமக்களால் அந்த கட்டிடத்திலிருந்து தப்ப முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் உள்ளுர் அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொவிட் கட்டுப்பாடுகளை முடிவிற்கு கொண்டுவருமாறு கோரி ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினார்கள்.
முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் சிலர் சீன ஜனாதிபதி பதவி விலகவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை திங்கட்கிழமை சங்காயில் உள்ள பகுதியொன்றில் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்கள் அதிகாரிகளின் கடும் நடவடிக்கைகள் காரணமாக சாத்தியமாகவில்லை.
ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்காக முக்கிய வீதியில் பாரிய தடுப்புகளை பொலிஸார் ஏற்படுத்தியிருந்தனர்.பலர் கைதுசெய்யப்பட்டனர்.
மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ஒன்றுகூடவேண்டிய இடம்என டெலிகிராம் மூலம் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் ( இரு நகரங்கள்) பொலிஸார் தங்கள் நடவடிக்கைகளை பலப்படுத்தியிருந்தனர்.
ஹங்சூ நகரில் இடம்பெற்ற சிறிய ஆர்ப்பாட்டம் கைதுகளை தொடர்ந்து நிறுத்தப்பட்டது.
இதேவேளை ஹொங்கொங்கில் நகரத்தின் மத்தியிலும் சீனா பல்கலைகழக வளாகத்திலும் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சீனாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு ஆதரவு தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
லண்டன் பாரிஸ் டோக்கியோநகரங்களிலும் மற்றும் ஐரோப்பா அமெரிக்காவின் பல்கலைகழகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
பொலிஸார் பொதுமக்களின் கையடக்கதொலைபேசிகளை சோதனையிடுகின்றனர் விபிஎன் உள்ளதா என சோதனையிடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் தடைசெய்யப்பட்ட டுவிட்டர் டெலிகிராம் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனரா எனவும் பொலிஸார் சோதனையிடுகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எனக்கும் ஐந்து நண்பர்களிற்கும் பொலிஸாரிடமிருந்து அழைப்பு வந்தது நாங்கள் எங்கிருக்கின்றோம் என கேட்டார்கள் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொலைபேசியில் தகவல்களை வழங்க தவறியதை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவர்களின் வீடுகளிற்கு சென்றுள்ளார்-ஆர்ப்பாட்டம் ஒன்றுகூடல் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM