ஈரானிய ஆர்ப்பாட்டங்கள்: 300 இற்கும் அதிகமானோர் பலி: ஈரானிய ஜெனரல்

Published By: Sethu

29 Nov, 2022 | 01:11 PM
image

ஈரானில் கடந்த செப்டெம்பரில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்ததையடுத்து இதுவரை 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ஈரானின் புரட்சிகர காவல் படையின் ஜெனரல் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் யுவதி, பொலிஸ் காவலிலிருந்த நிலையில் கடந்த செப்டெம்பர 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவரின் மரணத்துக்கு எதிராக ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,   ஈரானிய புரட்சிகர காவல் பiடையின் வான் பிரிவுத் தலைவரான பிரிகேடிய ஜெனரல் அமீரலி ஹஜிஸாதேஹ் இன்று கூறியுள்ளார்.

'அப்பெண்ணின் மரணத்தினால் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய தரவுகள் என்னிடமில்லை. ஆனால், இச்சம்பவம் இடம்பெற்றதிலிருந்து இந்நாட்டில் சிறார்கள் உட்பட 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனக் கருதுகிறேன்' என அவர் கூறியுள்ளார்.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலில் உயிரிழந்த அல்லது கொல்லப்பட்ட பொலிஸார், படையினரின் எண்ணிக்கையும் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒஸ்லோவைத் தளமாக்க கொண்ட ஈரானிய மனித உரிமைகள் குழுவானது குறைந்தபட்சம் 416 பேர உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52