(எம்.மனோசித்ரா)
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சுவிட்ஸர்லாந்தின் ஏற்றுமதி ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சுவிட்ஸர்லாந்தின் அரசின் பொருளாதார விவகாரங்கள் இராஜாங்க செயலாளர் அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இறக்குமதி ஊக்குவிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து பதனிடப்பட்ட உணவுகள், பாதுகாக்கப்பட்ட மீன் மற்றும் கடலுணவுகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட துணிகள் போன்ற ஏற்றுமதி உற்பத்திகளுக்காக விஞ்ஞான ரீதியான கற்கையொன்றை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கான ஐரோப்பிய சந்தையை அணுகுவதற்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்தல் இக்கற்கையின் நோக்கமாகும். குறித்த கற்கைக்கு சுவிற்சர்லாந்து பிராங்க் 100,000 நிதி சுவிட்ஸர்லாந்தின் இறக்குமதி ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM