நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய இந்திய வைத்தியர்கள்

Published By: Digital Desk 2

29 Nov, 2022 | 01:19 PM
image

இந்திய கர்நாடகா மாநிலத்தில் வயிற்று வலி என்று சிகிச்சைக்காக சென்ற நபரின் வயிற்றிலிருந்து 187 நாணயங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சந்தே கெல்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன்.

60 வயதான இந்த முதியவர் கடுமையான குடிப்பழக்கத்திற்குள்ளானார். நாளடைவில் இவருக்கு போதை பழக்கம் குடிநோயாக மாறிய நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர் நாணயங்களை விழுங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திம்மப்பாவுக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிறு வலி காரணமாக ராய்ச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். அங்கு எக்ஸ்-ரே எடுத்த பார்த்தபோது வயிற்றில் நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் திம்மப்பவின் உயிருக்கே ஆபத்து. எனவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர். இதற்காக பாகல்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையைப் பரிந்துரைத்துள்ளனர். அதன் அடிப்படையில் பாகல்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திம்மப்பா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் நேற்று அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்து 1.2 கிலோ எடைக்கு சுமார் 187 நாணயங்களை அகற்றியுள்ளனர். இவரது வயிற்றில் 56 ஐந்து ரூபா நாணயங்களும், 51 இரண்டு ரூபா நாணயங்களும், 80 ஒரு ரூபா நாணயமும் இருந்துள்ளது. உரிய நேரத்தில் இவற்றை அகற்றியதால் திம்மப்பா உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right