சாரதி மீது தாக்குதல் : இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

By Vishnu

29 Nov, 2022 | 12:59 PM
image

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை ஊழியர்கள் இன்று (29) காலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறுவன் ஒருவர் மீது பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்களால் விபத்தை ஏற்படுத்திய இ.போ.ச சாரதி மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சாரதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

பொலிசாரின் இச் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று யாழ் பிராந்திய சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

எனினும் தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் இன்று வடக்கு மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வட மாகாணத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகள் இப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா சாலையினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33