786 மற்றும் 782 பேருந்து வழித்தட வீதிகளை புனரமைக்குமாறு கோரி மக்கள் இன்றையதினம் வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
காரைநகருக்கு செல்லும் குறித்த இரண்டு பிரதான வீதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வீதிகளை திருத்தம் செய்து தருமாறு கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் போக்குவரத்துகள் முடங்கின.
இந்த போராட்டத்தில் வலி. மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வலி.மேற்கில் உள்ள வீதிகளை புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து மூளாய் அரசடி சந்தியில் இன்று {29} செவ்வாய்க்கிழமை வீதி மறிப்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இவ்வீதிகளில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெற்று பலர் காயமடைந்துள்ளனர் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
நிறைமாதக் கர்ப்பவதிகள் மற்றும் தீவிர நோயாளர்களை இவ்வீதிகளூடாகக் கொண்டுசெல்லும்போது அவர்கள் வலியால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் முடிவில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்.அரச ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட கடிதங்கள் வலி.மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதன் பிரதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM