'வாரிசு' அப்டேட்

By Digital Desk 5

29 Nov, 2022 | 11:26 AM
image

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'வாரிசு' திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் 'வாரிசு' திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் திகதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 'வாரிசு' திரைப்படம் திட்டமிட்ட திகதியில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவது உறுதி என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ‌

'வாரிசு' திரைப்படத்துடன் அஜித்குமார் நடித்திருக்கும் 'துணிவு' திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், வழக்கத்தை விட கூடுதலாக விஜய்யின் ரசிகர்களிடம் 'வாரிசு' திரைப்படத்தைப் பற்றிய தகவல்களை இணையத்தில் வைரலாக்குவது அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இலங்கை, மலேஷியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிக பட மாளிகையை கைப்பற்றுவது யார்? என்ற போட்டி இரு தரப்பினருக்கும் ஏற்பட்,டிருக்கிறது. 

இலங்கையை பொறுத்தவரை அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சம பலத்துடன் இருப்பதால், 130 க்கும் மேற்பட்ட படமாளிகைகளில் இரண்டு படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 'வாரிசு' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ரஞ்சிதமே..' எனத் தொடங்கும் விஜய் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி, இதுவரை 70 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடல், டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்றும், அந்தப் பாடலை சிலம்பரசன் பாடியிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் தளபதி விஜய், நத்தார் திருவிழாவை குடும்பத்தினருடன் லண்டனில் கொண்டாடவிருப்பதாகவும், அதற்காக அவர் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா நிறைவடைந்ததும், லண்டனுக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே 'வாரிசு' திரைப்படத்துடன் 'துணிவு' திரைப்படமும் வெளியாகவிருப்பதால், 'வாரிசு' படத்தை வெற்றி படமாக்க அவரது ரசிகர்களின் ஆதரவு தேவை என்பதற்காக, அவர்களை ஒருங்கிணைத்து சென்னைக்கு வரவழைத்து, தன் கையால் பிரியாணி செய்து, ரசிகர்களை பசியாற வைத்து விஜய் உற்சாகப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இது சிறுவர்களின் உலகம் - 'தொட்டி...

2023-02-08 11:56:44
news-image

சந்தானத்திற்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்

2023-02-07 15:17:58
news-image

யோகி பாபு நடிக்கும் 'லக்கி மேன்'...

2023-02-07 15:17:38
news-image

'தண்ட காரண்யம்' திரைப்படத்தின் டைட்டில் லுக்...

2023-02-07 14:52:23
news-image

அழுது கொண்டே கதை கேட்ட அபர்ணா...

2023-02-07 14:52:41
news-image

வரவேற்பைப் பெற்றிருக்கும் 'கப்ஜா' படத்தின் டைட்டில்...

2023-02-07 14:29:41
news-image

ஜெயிலர்' படத்தில் இணைந்த பொலிவூட் பிரபலம்

2023-02-06 13:48:02
news-image

தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு

2023-02-06 13:28:04
news-image

சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை' படத்தின்...

2023-02-06 13:27:24
news-image

கவின் நடிக்கும் 'டாடா' திரைப்படத்தின் முன்னோட்டம்...

2023-02-06 13:11:13
news-image

தான்யா ரவிச்சந்தினின் 'றெக்கை முளைத்தேன்' படத்தின்...

2023-02-06 13:05:51
news-image

லதா மங்கேஷ்கர் நினைவு தினம்: மணல்...

2023-02-06 12:26:17