சகவாழ்வுக்கான சமாதான பாத யாத்திரையும் ‘பாதை கூறும் வெள்ளித் தாரகைகள்’ எனும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அனுபவ கற்கை நூல் வெளியீடும் நாளை புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தேசிய சாமாதானப் பேரவை அறிவித்தள்ளது.
அன்றைய தினம் முன்னதாக மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து சமாதானப் பாத யாத்திரை ஆரம்பமாகி கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் வரை செல்லும். இப்பாத யாத்திரையில் தேசிய சமாதான பேரவையின் அலுவலர்கள், மாவட்ட சர்வமத உறுப்பினர்கள், இளைஞர் யுவதிகள், சர்வமதப் பெரியார்கள், சகவாழ்வுக்கான செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இன்னும் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமத இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.
சமாதான பாத யாத்திரையின் நிறைவில் ‘பாதை கூறும் வெள்ளித் தாரகைகள்’ எனும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சமாதான அனுபவ கற்கை நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.
சிங்களம் தமிழ் ஆகிய இருமொழிகளில் மொழி பெயர்ப்புடன் வெளியிடப்படவுள்ள இந்நூலில் தேசிய இன நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும் வலியுறுத்தும் இன அடையாளங்களும் எல்லலைகளும். இனப்பாகுபாடுகளை இல்லாதொழிக்கும் தீர்வினை நோக்கி, பாதை தெளிவாக இருந்தும் ஏன் வழி தவறினோம், அளுத்கமை தீப்பிடித்தது, திகனவில் தவறு நேர்ந்தது உள்ளிட்ட சுமார் 107 அனுபவக் கதைகள் இடம்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM