இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வியாளர் பேராசிரியர் எம்.ஏ.எஸ்.ஏப்.ஸாதியா பெளஸர் இன் ‘மலையகக் கவிதைகளும் மக்களும்’ மற்றும் ‘மலையகக் கவிதைகளில் பெண்களும், சிறுவர்களும்’ எனும் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் மற்றும் கண்டி தமிழ் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் தலைமையில் கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கவிதை நூலினை உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைத்தார்.
நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம். ஏ. நுஃமான் கௌரவ அதிதியாகவும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை தலைவர் முதன்மை பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் உள்ளிட்ட இலக்கியவாதிகள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் துரை மனோகரன் விழா தொடர்பில் சிறப்புரையாற்றியதுடன், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் எழுத்தாளருமான எம். அப்துல் றஸ்ஸாக் ஆகியோர் நூல் மீதான உரையினையும் நிகழ்த்தினர். கலை, கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியவாதிகள், கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், கண்டி முஸ்லிம், தமிழ் வர்த்தகர்கள், முக்கிஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM