அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க வேண்டும் - அநுர பிரியதர்ஷன யாப்பா

Published By: Vishnu

28 Nov, 2022 | 09:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

அரசியலில் ஓய்வுபெற்றவர்களை வெளிநாட்டு தூதுவர்களாக அனுப்பும் நிலைக்கு வெளிவிவகார அமைச்சு அரசியல் மயமாகி இருக்கின்றது.

அதனால் வெளிவிவகார அமைச்சு முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாகவே எமது நாட்டின் நிலைமை சர்வதேசத்துக்கு எடுத்துச்சொல்லப்படுகின்றது. வெளிநாட்டு தூதுவர்கள் என்பது அந்த நாட்டின் கண்ணாடி போன்றவர்கள்.

அதனால் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்படுபவர்கள் இராஜதந்திர அனுபவமுள்ள, மொழி ஆற்றல் உள்ளவர்கள் நியமிக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறானவர்களே தூதுவர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். 

ஆனால் தற்போது வெளிநாட்டு தூதுவர்கள் நியமனம் அரசியல் மயமாகி, அரசியலில் ஈடுபட்டவர்களின் உறவினர்களை ஓய்வெடுக்கும் ஒரு பதவியாக மாற்றப்பட்டிருக்கின்றது. இது பாரிய பிரச்சினையாகும்.

அத்துடன் வெளிநாட்டு தூதரகங்களில் உள்ளவர்கள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டுவரும் எமது சகோதரர்களின் நிலைமைகள் தொடர்பில் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்திருந்தால், ஓமானில் இடம்பெற்ற சம்பவம் இடம்பெற இடமில்லை. எமது நாட்டு ஊழியர்கள் மாத்திரமே இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால் வெளிநாட்டு அமைச்சு முழுமையாக மறுசீரமைக்கப்படவேண்டும்.

மேலும் பிரான்ஸ்,ஜேர்மன், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு சேவைக்கு அனுப்புபவர்களை அந்த அந்த நாட்டுமொழி பயிற்சி வழங்கப்படவேண்டும். ஏனெனில் அந்த நாடுகளில் ஆங்கில மொழி பயன்படுத்துவதில்லை. அங்கு செல்பவர்களுக்கு அந்நாட்டு மொழி தெரிந்தால்தான் எமது நாடு தொடர்பாக அவர்களுக்கு எடுத்துச்சொல்ல முடியும்.

அத்துடன் வெளிநாட்டு சேவைக்கு அனுப்புவதற்கு நடத்தப்படும் போட்டிப்பரீட்சையில் மொழி தேர்ச்சி பார்க்கப்படுவதி்ல்லை. அது பாரிய தவறாகும். மொழி தெரியாதவர்கள் பலர் வெளிநாட்டு தூதுவர்களாக அனுப்பப்படுகின்றார்கள். வெளிநாட்டு தூதுவர்களாக அனுப்பப்படுவர்களுக்கு மொழி ஆற்றல் இருப்பதுடன் திடகாத்திரமாக செயற்படக்கூடியவராக இருக்கவேண்டும். இந்த பண்புகள் இருந்தால்தான் வெளிநாட்டு தூதுவர் கடமையை சரியான முறையில் செய்யலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17