சேர்பியா - கெமறூன் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது

By Sethu

28 Nov, 2022 | 06:06 PM
image

(நெவில் அன்தனி)

சேர்பியாவுக்கும் கெமறூனுக்கும் இடையில் அல் ஜனூப் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (28) மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஜீ குழுவுக்கான முதலாம் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டி 3 - 3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. 

போட்டி ஆரம்பித்தது முதல் வெற்றிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் இரண்டு அணிகளும் விளையாடியதால் போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் டோலோவின் கோர்னர் கிக்கைப் பயன்படுத்தி ஜியேன் சார்ள்ஸ் கெஸ்டெலெட்டோ பந்தை கோலினுள் புகுத்தி கெமறூனை முன்னிலையில் இட்டார்.

எவ்வாறாயினும் முதலாவது ஆட்ட நேரத்தின் உபாதையீடு நேரத்தில் 2 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்ட சேர்பியா இடைவேளையின்போது 2 - 1 என முன்னிலைப் பெற்றது.

உபாதையீடு நேரத்தின் 1ஆவது நிமிடத்தில் டெடிக்கின் ப்றீ கிக் பந்தை நோக்கி மிக உயரமாகத் தாவிய ஸ்ட்ராஹிஞ்சா பாவ்லோவிச், தலையால் முட்டி கோல் நிலையை சமப்படுத்தினார்.

2 நிமிடங்கள் கழித்து ஸிவ்கோவிச் பரிமாறிய பந்தை சேர்ஜெஜ் மிலின்கோவிச் சாவிச் கோலாக்கி சேர்பியாவை முன்னிலையில் இட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் 53ஆவது நிமிடத்தில் சேர்பியா 3ஆவது கோலைப் போட்டது. டெடிக் பரிமாறிய பந்த அலெக்சாண்டர் மிட்ரோவிச் கோலாக்கி சேர்பியாவை 3 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இட்டார்.

ஆனால், கெமறூன் விடுவதாக இல்லை. கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்த கெமறூன் அடுத்தடுத்த நிமிடங்களில் 2 கோல்களைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தி சேர்பியாவைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் கெமறூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் ஓங்கி உதைத்த பந்து சேர்பியா கோலின் மேல் பகுதிக்குள் புகுந்தது.

அடுத்த நிமிடமே அபூபக்கர் பரிமாறிய பந்தை எரிக் மெக்ஸிம சூப்போ மோட்டிங் கோலினுள் புகுத்த கோல் நிலை 3 - 3 என சமமானது.

இந்தப் போட்டி முடிவுடன் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன.

இது இவ்வாறிருக்கு இக் குழுவில் இடம்பெறும் பிரேஸிலுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12