1989 ஆம் ஆண்டு தொடக்கம் 'MARLBO' ட்ரேடிங் நிறுவனம் மின்சார மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் எட்டாவது வெற்றிகரமான 'வருட இறுதி மலிவு விற்பனை” டிசம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதிவரை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை அதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள 24, அப்துல் காதர் மாவத்தை , கொழும்பு 3 என்ற முகவரியில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நடைபெறும்.
கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய போதிலும் “மார்ல்போ” (MARLBO) நிறுவனம், அதன் வருட இறுதி மலிவு விற்பனையை எந்த விதமான இடையூறுகளுமின்றி, ஒழுங்கு செய்துள்ளது. அதன் அனைத்துப் பயன்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே 'ஆயுசுடுடீழு” நிறுவனத்தின் நோக்கமாகும்.
தெரிவு செய்யப்பட்ட ஒரு சில உபகரணங்கள் 75 வீதம் வரையான விலைக்கழிவுகளுடன் விற்பனை செய்யப்படும். குறிப்பாக நிறுவன உபகரணங்கள், பாதுகாப்பு உற்பத்திகள் மற்றும் “சுவிட்ச்”கள் என்பனவற்றை இந்த 3 நாள் மலிவு விற்பனையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு உபகரணங்களைப் புதப்பித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இந்த மலிவு விற்பனையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, தொழில் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தங்கள் மின்சார உபகரணங்களை புதுப்பித்துக் கொள்வதாகும்.
அத்துடன் மின்சார உபகரணங்களைக் கொள்வனவு செய்யக்கூடிய கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளும், உற்பத்தியாளர் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
அத்துடன் தரமான முத்திரைப் பதித்த ( Branded) மின்சார உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். இந்த வருட இறுதி மலிவு விற்பனையின் மூலம், ஒருவர் தமது கொள்வனவு சக்திக்குட்பட்ட தரமான முத்திரை பதித்த மின்சார உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள இயலும்.
மேலும் இலகுவாக மின்சார பொருட்கள் உபகரணங்களை கொள்வனவு செய்ய, 'MARLBO' இணையவழி சேவை ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. buymarlbo.com மூலம் மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியும்.
Marlbo மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது, புதிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மேலும், டொலரின் பெறுமதி உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ள போதிலும் Marlbo வாடிக்கையாளர்களுக்கு அதன் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை எனவும் அதற்கான காரணம் விலையேற்றத்தின் ஒரு பகுதியை Marlbo நிறுவனம் ஏற்றுக்கொள்கின்றது என்றும் MARLBO டிரேடிங் நிறுவனத்தின் தலைவர் எம்.மணிமுத்து தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM