(எம்.வை.எம்.சியாம்)
ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டிற்கும் மனநோய் ஏற்படுவதற்கும் தெளிவான தொடர்புகள் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மேலும், பாடசாலை மாணவர்களையும் இளைஞர் சமூகத்தையும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவதாக மனநோய் சிறப்பு வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய சமூகத்தில் உள்ள மனநோய்க்கும் ஐஸ் என்ற போதைப் பொருளுக்கும் தெளிவான தொடர்பு இருக்கிறது. மேலும் ஐஸ் போதைப்பொருள் பாவனை காரணமாக பல்வேறு மன நோய்கள் மற்றும் ஏனைய வேறு நோய்களை உருவாக்கும். அண்மையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போது ஐஸ் போதைப்பொருளிற்கும் மன நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது போதைப்பொருள் பாவனை நாட்டில் பெரும் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது. நாட்டில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் போதைப்பொருட்களை வகுப்பறைகளுக்கு வெளியே பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் மீது பெற்றோரின் கவனக்குறைவு சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு தூண்டியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM