நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட முடியும் - மைத்திரி

Published By: Digital Desk 5

28 Nov, 2022 | 05:02 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்த காரணிகளினால் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்படவில்லை. 2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கத்தின் ஒருசில செயற்பாடுகள் சர்வதேச உறவை இல்லாதொழித்தது. 

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட முடியும். 

அரசியல் பரிந்துரைகளுடன் வெளிநாட்டு துர்துவர்கள் நியமிக்கும் போது சர்வதேச உறவு சிறந்ததாக அமையாது. துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் பின்னணியில் வெளிவிவகார அமைச்சு,தூதுவராலய சேவைகள் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

பொருளாதார பாதிப்பினை கருத்திற் கொண்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் ஒருசில தூதரகங்கள் மூடப்பட்டமை கவனத்திற்குரியன.

2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்பட்டது என குறிப்பிடப்படுகிறது. யுத்த காரணிகளினால் இலங்கையின் சர்வதேச உறவில் பாதிப்பு ஏற்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை காரியாலயத்தின் முன்பாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருசிலருடன் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

இதன்போது அரச தலைவர் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு இளநீர் வழங்கினார் இதனை தொடர்ந்து இலங்கை;கும்,ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கப்பட்டது.

அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வருகை தந்த போது அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் நவநீதம் பிள்ளையை தான் திருமணம் செய்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டார்.இவ்வாறான கருத்துக்கள் சர்வதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

சர்வதேச உறவு என்பது பரந்துப்பட்டது.சிறந்த கொள்கை,ஊழலற்ற நிர்வாகம் உள்ளிட்ட விடயங்கள் சர்வதேச உறவின் போது அவதானத்திற் கொள்ளப்படும்.

நாட்டின் ஒருசில அரசியல்வாதிகளின் முழு விபரங்களும்,அவர்களின் அரசியல் செயற்பாடுகளையும் சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துள்ளது.

முன்னாள் பிரதமர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க, எஸ்.டப்ள்யூ,ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்தில் கடைப்பிடித்த பிளவுப்படாத மற்றும் நடுநிலையான வெளிவிவகார கொள்கை இலங்கையை உலகத்துடன் ஒன்றிணைத்தது.வெளிவிவகார கொள்கை சிறந்ததாக காணப்பட்டால் மாத்திரமே அனைத்து நாடுகளுடன் இணக்கமாக செயற்பட முடியும்.

கடந்த காலங்களில் எமது அரச தலைவர்கள் சர்வதேச உறவுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள்.அதன் பிரதிபலனை எதிர்கொண்டோம்.

நாட்டின் உள்ளக விவகாரங்கள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் சர்வதேச உறவின் தன்மையை தீர்மானிக்கும்.எனது ஆட்சியில் சர்வதேச உறவு சிறந்த முறையில் காணப்பட்டது.

சர்வதேச உறவினை சிறந்த முறையில் கடைப்பிடித்த காரணத்தினால் தான் நல்லாட்சியை சர்வதேசம் அங்கிகரித்தது.

வெளிநாட்டு சேவைத்துறை மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பில் தேர்ச்சிப் பெற்றவர்களை தூதுவர்களாக நியமிக்க வேண்டும்.அரசியல் நோக்கத்துடன் வெளிநாட்டு தூதுவர்களை நியமிக்கும் போது சர்வதேச உறவு பாதிக்கப்படும்.

முக்கிய நாட்டுக்கு இலங்கை தூதுவராக அரசியல் பின்னணியில் ஒருவர் நியமிக்கப்பட்டார்.இவர் விடுமுறை காலத்தில் இலங்கைக்கு வருவதில்லை,அமெரிக்காவுக்கு விடுமுறை கழிக்க செல்கிறார்.இவ்வாறானவர்களினால் நாட்டுக்கு சேவை கிடைக்கப் பெறும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04