அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை வகுக்கப்பட்டால் சர்வதேசம் அங்கீகரிக்கும் - நிரோஷன் பெரேரா 

By Digital Desk 2

28 Nov, 2022 | 04:51 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

கோட்டபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு இனவாதம், மதவாதம் பிரதான அம்சமாக அமைந்தது. வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள பிற சமூகத்தின் மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் இன்று சர்வதேச அரங்கில் மலினப்படுத்தப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பின் இனவாதம், மதவாதத்தை நாட்டு மக்கள் அடித்து விரட்டியுள்ளார்கள். அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை வகுக்கப்பட்டால் சர்வதேசம் இலங்கையை முழுமையாக அங்கிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (நவ.29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் என்றுமில்லாத வகையில் இலங்கை தற்போது சர்வதேச மட்டத்தில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தற்போது பொருளாதார குற்றச்சாட்டும் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற 57 ஆவது கூட்டத்தொடரின் போது 7 நாடுகள் மாத்திரம் தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு சார்பாக செயற்பட்ட ஆசியாவின் இஸ்லாமிய நாடுகள் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக செயற்படவில்லை,பெரும்பாலான நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்வதை தவிர்த்துக் கொண்டன.

ஆளும் தரப்பு  தேர்தலில் வெற்றிப் பெற சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்ட வைத்தியர் சாபி விவகாரம், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் வகையிலான கொத்து என குறிப்பிடப்பட்ட முட்டாள்தனமாக விடயங்கள் இன்று சர்வதேச மட்டத்தில் மலினப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடல்களை தகனம் செய்வதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியது.

தமது வாக்கு வாங்கியை பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கம் ஆட்சி செலுத்தியது.இனவாதத்தின் ஊடாக அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் சமூகத்தின் மத்தியில் அருவறுக்கத்தக்க பேச்சுக்களை பிரயோகித்தது,இறுதியில் முழு நாடும் பொருளாதார பாதிப்பை எதிர் கொண்டு,நாட்டு தலைவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

பொதுஜன பெரமுனவின் பலவீனமான அரசியல் தலைவர் நாட்டை விட்டு வெளியேறி சர்வதேசத்தின் ஆதரவை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுஜன பெரமுனவின் இனவாதம் மற்றும் மதவாத அரசியலை நாட்டு மக்கள் முழுமையாக இல்லாதொழித்துள்ளார்கள். ஆளும் தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட மிஸ்டர் கிளீன் தற்போது ஆளும் தரப்பினரை பாதுகாக்க வந்துள்ளார்.

வெளிவிவகார கொள்கை மறுசீரமைக்கும் போது நாட்டில்  இனவாதம் மற்றும் மதவாதம் இல்லாத அரசியல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இனவாதம் இல்லாத கொள்கையை செயற்படுத்தினால் சர்வதேசம் இலங்கையை முழுமையாக அங்கிகரிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09