ஜேர்மனிய முன்னாள் வீரரின் படத்துடன் வாய் பொத்தி போஸ் கொடுத்த கத்தார் ரசிகர்கள்

By Sethu

28 Nov, 2022 | 03:27 PM
image

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின்போது, இனவாத விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட ஜேர்மனிய முன்னாள் வீரர் மெசுத் ஒஸிலின் படத்தை ஏந்திக்கொண்டு, தமது வாயை கையால் பொதிக்கொண்டு கத்தார் ரசிகர்கள் போஸ் கொடுத்தனர். 

கத்தாரில் ஒரு பாலின உறவு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருபாலின உறவாளர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக வன் லவ் கைப்பட்டியை அணிவதற்கு 7 ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்திருந்தன. இத்தகைய கைப்பட்டியை அணியும் வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காட்டப்படும் என  பீபா எச்சரித்தது. 

இதனால், அதிருப்தியடைந்த ஜேர்மனிய வீரர்கள், ஜப்பானுடனான தமது போட்டிக்கு முன்னர் குழுவாக படம்பிடித்துக்கொண்ட கொடுத்தபோது, தமது வாயை கையால் பொத்திக்கொண்டு போஸ் கொடுத்தனர். 

இந்நிலையில்,இலங்கை, இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் ஸ்பெய்னுடன் ஜேர்மனி மோதியது. 

இப்போட்டியின்போது, அரங்கிலிருந்த கத்தார் ரசிகர்கள் பலர், ஜேர்மனிய அணியின் முன்னாள் வீரர் மெசுத் ஒஸிலின் படத்தை  ஏந்தியவாறு கையால் வாயைப் பொதிக்கொண்டிருந்தனர். 

துருக்கிய பெற்றோரின் மகனாக மேற்கு ஜேர்மனியில் 1988 ஆம் ஆண்டு பிறந்தவர் மெசுத் ஒஸில் (Mesut Ozil)

2014 இல் ஜேர்மனி, உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு பங்காற்றியவர் அவர். எனினும் 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் ஜேர்மனி பிரகாசிக்கத் தவறிய நிலையில் மெசுத் ஒஸில் மோசமாக விமர்சிக்கப்பட்டார். 

துருக்கிய வம்சாவளியினரை இனவாதமாக நடத்துவதாக ஜேர்மன் கால்பந்தாட்டச் சம்மேளனம், ரசிகர்கள், ஊடகங்கள் மீது மெசுத் ஒஸில் குற்றம் சுமத்தினார்.

துருக்கிய ஜனாதிபதி தையீப் அர்துகானின் புகைப்படத்துடன் ஒஸில் போஸ் கொடுத்ததையடுத்து இவ்விமர்சனங்கள் அதிகரித்தன.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒஸில், 'நாம் வெற்றி பெறும் போது நான் ஒரு ஜேர்மனியன், தோல்வியடையும்போது நான் ஒரு குடியேறி' எனக் கூறியிருந்தார். 

இவ்வாறான பின்னணியிலேயே மெசுத் ஒஸிலின் படத்துடன் வாயைப் பொத்தியவாறு கத்தார் ரசிகர்கள் காணப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பீபா தலைவருக்கு அருகில் வன்லவ் கைப்பட்டியுடன் அமர்ந்த ஜேர்மனிய அமைச்சர் 

வாயை பொத்திக்கொண்டு போஸ் கொடுத்த ஜேர்மனிய வீரர்கள்

உலக கிண்ணத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒன்லவ் கைப்பட்டி 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கி பூகம்பத்தில் கால்பந்தாட்ட வீரர் பலி

2023-02-08 11:23:55
news-image

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஆரோன்...

2023-02-07 15:23:16
news-image

இருபதுக்கு 20 உலகக் கிண்ண பயிற்சிப்...

2023-02-07 15:35:37
news-image

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்துக்கு  சவூதி...

2023-02-07 14:42:05
news-image

இரட்டைச் சதம் விளாசிய சந்தர்போலின் மகன்...

2023-02-07 15:01:00
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கான 33 வருட ஆரம்ப...

2023-02-07 14:07:13
news-image

முதல் சுற்றுடன் வெளியேறினார் சானியா

2023-02-07 11:50:49
news-image

6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட...

2023-02-07 11:25:04
news-image

அனைவருக்கும் ஆசிய விளையாட்டு விழா என்பதை...

2023-02-07 09:59:15
news-image

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட இறுதியில் 76ers, ஓல்ட்...

2023-02-06 21:15:15
news-image

சர்வதேச போட்டிகளில் நடுநிலை வீரர்களாக  பங்குபற்ற...

2023-02-06 16:46:25
news-image

பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் தமிழ்...

2023-02-06 14:53:21