மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன் - வடக்கு ஆளுநர்

Published By: Vishnu

28 Nov, 2022 | 04:29 PM
image

வட மாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

ஆளுநர் செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டதாவது ஆளுநர் தான் நினைத்தபடி நியதிச் சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி வெளியிடுகிறார் என சிலர் தம்மை மக்கள் மத்தியில் தலைவர்களாகக் காட்ட முயல்கின்றனர்.

வட மாகாண சபை செயற்பாட்டில் இல்லாத காலத்தில் மக்கள் நலன் சார்ந்த பல நியாதிச்ச சட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்படுத்தாமல் உள்ளது.

ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் 154C மாகாண சபையொன்றுக்கு நியதிகளை இயற்றும் அதிகாரம் அவற்றில் உள்ள விடயங்கள் தொடர்பான நிறைவேற்று அதிகாரம் அந்த மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்ட மாகாண ஆளுநரால் நேரடியாகவோ அல்லது அமைச்சர்கள் சபையின் அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது கீழ்நிலை அதிகாரிகள் மூலமாகவோ செயல்படுத்தப்படும்.

பிரிவு 154F அதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிற நிலையில் ஒவ்வொரு சட்டமும் மாகாண நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 

பல சட்டங்கள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சிலருக்கு மறுபரிசீலனை தேவைப்படுகிறதோடு தமது அதிகார வரம்பு தெரியாமல் பேசுகின்றனர்.

அரசியலமைப்பில் எழுதப்பட்ட மகாண அதிகாரங்கள் பல தமது செயல்பாடுகளை செய்யாத நிலையில் அவை ஒவ்வொன்றாகச் சரிபார்க்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நிர்வாக ரீதியாகவும் இடைவெளிகள் உள்ளதோடு அதிபர் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் யாழ்ப்பாணத்திற்கு சாதகமான கொள்கையைக் கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் மாகாண அரச சேவை சில வட்டத்துக்குள் முடக்கிவிடப்பட்ட நிலையில் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் இலகுபடுத்தப்பட்டுள்ளது.

ஆகவே ஆளுநர் என்ற வகையில் வடக்கு மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள உரிய சட்ட திட்டங்களை செயல்படுத்துவேன் யாரும் எனக்கு கற்பிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூட்டுறவு சங்க தேர்தல் தோல்வியின் மூலம்...

2025-01-20 23:14:53
news-image

22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள்...

2025-01-20 23:08:29
news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14