ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண முடியாது - டிலான் பெரேரா

By Digital Desk 5

28 Nov, 2022 | 04:08 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதிக்கு ஒப்பானவர். ஆகவே நிலையறிந்து அதற்கேற்ப செயற்பட வேண்டும். ஹிட்லர் போல் செயற்படுவதாக குறிப்பிட்டு ஊடகங்களுக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வு காண முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையின் வெளிவிவகார கொள்கை காலம் காலமாக திருத்தம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.பிளவுப்படாத மற்றும் நடுநிலையான வெளிவிவகார கொள்கையின் தன்மை முழுமையாக பேணப்படுகிறதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்த லக்ஷ்மன் கதிர்காமர் வெளிவிவகார கொள்கையை மறுசீரமைத்தார்.அக்காலக்கட்டத்தில் இலங்கையின் வெளிவிவகார கொள்கையை உலகம் அங்கிகரித்தது.

முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் வெளிவிவகாரத்துறையில் நவீன காலத்திற்கு பொருத்தமான மூன்று சட்டத்திருத்தங்களை மேற்கொண்டார்.அரசியல் மாற்றங்கள் வெளிவிவகார கொள்கையில் தாக்கம் செலுத்த கூடாது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெளிவிவகார கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.வெளிவிவகார கொள்கை அடிக்கடி மாற்றமடையும் போது கொள்கைளின் உறுதிப்பாடு நிலையற்றதாகும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதிக்கு ஒப்பானவர்.இந்திய ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுபவர் அல்ல,பாராளுமன்றத்தின் ஊடாகவே தெரிவு செய்யப்படுவார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல,பாராளுமன்ற உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட்டவர்.

மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை போன்று நினைத்துக்கொண்டு ஹிட்லரை போன்று செயற்படுவதாக குறிப்பிடுகிறார்.

ஹிட்லரை போன்று செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஊடகங்களுக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து எந்த நெருக்கடிக்கும் தீர்வு காண முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் -...

2023-02-08 14:36:56
news-image

எளிமையான முறையில் இடம்பெற்ற 9 ஆவது...

2023-02-08 16:05:15
news-image

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு...

2023-02-08 14:34:26
news-image

மலையகப் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாக ரணில் சொல்வதை...

2023-02-08 16:52:58
news-image

அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி...

2023-02-08 16:26:15
news-image

வரி திருத்த சட்டத்தை அரசாங்கம் மீளப்பெற...

2023-02-08 15:54:09
news-image

இனப்பிரச்சனைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின்...

2023-02-08 15:18:23
news-image

எதிர்காலத்தில் இ.தொ.கா. மக்களுக்கு தேவையான விடயங்களை...

2023-02-08 17:02:02
news-image

அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து...

2023-02-08 16:48:01
news-image

புதிய வரி அறவீட்டுக்கு எதிராக தொழில்...

2023-02-08 16:38:26
news-image

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல...

2023-02-08 16:36:18
news-image

இலங்கையில் சிறுவர்களுக்கான ஆதரவுச் சேவைகளைப் பலப்படுத்த...

2023-02-08 16:34:52