கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப்பெட்டியில் வைத்த மனைவி : இந்தியாவில் சம்பவம்

By Digital Desk 2

28 Nov, 2022 | 03:04 PM
image

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவனை கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்த மனைவியை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மையில் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது.

அதே போன்று டெல்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை மனைவி, மகன் உதவியுடன் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசி உள்ளார்.

டெல்லியை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

டெல்லி கிழக்கில் இருக்கும் பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறான்.

அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை. இதனால் பூனம் கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.

கணவனுக்கு தூக்க மருந்தை கொடுத்து பின்னர் கொலை செய்தார். கடந்த ஜூன் மாதம் இந்த கொலை சம்பவம் நடந்தது. பின்னர் கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். மகன் உதவியுடன் இந்த செயல்கள் அனைத்தையும் பூனம் செய்துள்ளார்.

வெட்டப்பட்ட உடல் பாகங்களை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார். உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசியுள்ளார்.

கண்காணிப்பு கெமராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. தீபக் இரவில் கையில் பையுடன் செல்வது தெரிந்தது. அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வது பதிவாகி இருந்தது.

கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில்  பொலிஸார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்துள்ளனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

அவரது உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27
news-image

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக...

2023-02-01 12:16:48
news-image

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன்...

2023-02-01 11:56:05
news-image

சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும்...

2023-02-01 11:54:19
news-image

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது -...

2023-02-01 11:47:11
news-image

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' -...

2023-02-01 11:15:02
news-image

உரியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின் சிந்து...

2023-02-01 11:42:59
news-image

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால்...

2023-02-01 11:13:29