இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி இன்று பதவி விலகியுள்ளார். 

இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவும் மற்றும் தற்போதைய அரசியலமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் தொடர்பில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரதமர் மேட்டியோ ரென்சி பெரும் தோல்வியடைந்ததால்  இம்முடிவினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மேட்டியோ ரென்சி பரிந்துரைத்த மாற்றங்களில் மத்திய அரசை வலுப்படுத்தி, செனட் சபையின் பலத்தினை குறைக்கும் விதமாக அமைந்திருந்தமையால் இந்த திட்டத்திற்கு பலரும் தங்களின் எதிர்ப்பினை வெளிகாட்டியமை குறிப்பிடத்தக்கது.