(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
2009 ஆம் ஆண்டு யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம் வெற்றிக் கொள்ளப்படவில்லை. வெளிவிவகார கொள்கையினை மறுசீரமைத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
புரையோடி போயுள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணும் தேவை தற்போது காணப்படுகிறது,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்பும் வகையில் புலம் பெயர் அமைப்புகளுடன் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் சர்வதேச தொடர்பு அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்இபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
பிளவுப்படாத மற்றும் நடுநிலையான வெளிவிவகார கொள்கையின் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வெளிவிவகார கொள்கையின் குறுகிய மற்றும் நீண்டகால கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் வெளிவிவாரத்துறை அமைச்சு நிதியமைச்சுடன் ஒன்றிணைந்து செயற்படுகிறது. குடன் கடன் மறுசீரமைப்புக்கான சட்டம் மற்றும் நிதி ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் வெளிவிவகாரத்துறை அமைச்சு சுற்றுலாத்துறை அமைச்சுடன் ஒன்றிணைந்து செயற்படுகிறது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 2 இலட்சத்துக்கு 75 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய அமைச்சுக்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவது குறுகிய கால திட்டமாக உள்ளது.
12.5 பில்லியனாக காணப்படும் இலங்கையின் சர்வதேச பிணைமுறிகளை எதிர்வரும் ஆண்டு 5 பில்லியனாக குறைத்துக் கொள்வது மத்தியகால திட்டமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் ஜனவரி மாதளவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது
அத்துடன் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச திட்டங்களில் ஒன்றிணைய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இந்திய பெருங்கடலின் தீவு நாடுகளுடன் ஒன்றிணைந்து காலநிலை மாற்ற நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்;த்துள்ளோம்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டாலும்,நாட்டில் சமாதானம் கட்டியெழுப்பப்படவில்லை. அனைவருக்கமான நாட்டை உருவாக்க வேண்டிய சூழல் தோற்றம் பெற்றுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் ஒருசில திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் பல ஆண்டு காலம் சிறையில் இருந்த தமிழர்களை விடுதலை செய்ய முடிந்தது.
எதிர்வரும் நாட்களில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது சிக்கல் நிறைந்ததாக காணப்படுகிறது.நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்பும் வகையில் புலம் பெயர் அமைப்புகளுடன் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் சர்வதேச தொடர்பு அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து.
புலம்பெயர் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.கனடாவில் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டுக்கு வருகை தந்தார்கள்.
எதிர்வரும் நாட்களில் பிரித்தானியாவின் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் இவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
நாடு என்ற ரீதியில் நீண்டகால திட்டங்களை வெளிவிவகாரத்துறை அமைச்சு ஊடாக வகுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துடன் ஒன்றிணைந்து 'உண்மை மற்றும் நல்லிணக்கம்'ஆணைக்குழுவை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டு,அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் இந்தியாஇ சீனா உட்பட பல்வேறு நாடுகளின் வெளி விவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் அவர்கள் உள்ளிட்ட மேலும் பல ராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் சர்வதேச நாடுகளுடனான இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த முடியும்.
சர்வதேச மாநாடுகள் பலவற்றிலும் ஜனாதிபதியின் தலைமையில் நாம் கலந்து கொண்டிருந்தோம். அந்த மாநாடுகளில் இணை அமர்வுகள் எமக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தன.
சர்வதேச நாடுகளில் பணிபுரிவோர் தொடர்பில் இக்காலங்களில் பேசப்பட்டு வருகின்றன. அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் பேச்சு வார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அது தொடர்பில் ஊடகங்கள் மூலம் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் இதுவரை ஓமானிலிருந்து 300 பேரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளமையை குறிப்பிட வேண்டும்.
ஒருவருக்கு 17 லட்சம் ரூபா செலவாகின்ற நிலையில் வெளிநாட்டு அமைச்சே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொடர்ந்தும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அதற்காக பெருமளவு நிதி தேவைக்கப்படும் என்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM