'வனம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும்' என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் 'வனமே என் இனமே' என்ற காணொளிப்பாடல் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தால் கடந்த வெள்ளிக்கிழமை (நவ 25) வெளியிடப்பட்டுள்ளது.
வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்துள்ள மலர்க் கண்காட்சியின்போதே இக்காணொளிப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைச்செயலாளர் கை. சரவணனின் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு நிகழ்ச்சியில் இசைவாணர் கண்ணன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு காணொளிப் பாடலின் முதல் திரையிடலை தொடக்கிவைத்தார்.
திரையிடலை தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பேராசிரியர் சி. ரகுராம் கருத்துரை வழங்கினார்.
'வனமே என் இனமே' பாடலை பூவன் மதீசன் எழுதி, பாடி, நடிக்க, ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். இது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஒரு தயாரிப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM