விஜய் சேதுபதி நடிக்கும் 'டிஎஸ்பி' படத்தின் இசை - முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

28 Nov, 2022 | 01:57 PM
image

'சேதுபதி ஐபிஎஸ்' எனும் திரைப்படத்துக்கு பிறகு, 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் 'டிஎஸ்பி' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்', 'சீம ராஜா', 'எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்களின் இயக்குநர் பொன். ராம் இயக்கத்தில் தயாராகியுள்ள 'டிஎஸ்பி' படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்தி வாஸ் நடித்திருக்கிறார். 

தினேஷ் கிருஷ்ணன் மற்றும் வெங்கி ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். 

காவல்துறை அதிகாரியின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் காவல்துறை அதிகாரியாக மீண்டும் கம்பீரமாக விஜய் சேதுபதி காட்சியளிக்கிறார். 

தமிழக நகரான திண்டுக்கல் பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதும், வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடன், அழுத்தமான ஒரு குறுஞ்செய்தியும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பங்குபற்றி விஜய் சேதுபதி பேசுகையில், 

"விக்ரம் படத்தில் படப்பிடிப்புக்கு இடையே சில தினங்கள்... சில மணித்தியாலங்கள் கமல்ஹாசனுடன் இணைந்து உரையாடியிருக்கிறேன்.

அந்த தருணத்தில் அவர் பகிர்ந்த அவருடைய அனுபவங்கள் எமக்கான பிரத்தியேக பரிசு" என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right