பிரேஸில், சுவிட்சர்லாந்து, போர்த்துக்கல், உருகுவே ஆகிய அணிகளுக்கு இன்று தீர்மானம் மிக்க போட்டிகள்

Published By: Digital Desk 5

28 Nov, 2022 | 01:56 PM
image

(நெவில் அன்தனி)

கத்தாரில் நடைபெற்றுவரும் 32 நாடுகளக்கு இடையிலான 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இதுவரை பிரான்ஸ் மாத்திரமே 16 அணிகள் நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் ஜீ மற்றும் எச் குழுக்களுக்கான முதல் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகள் இன்று திங்கட்கிழமை (28) நடைபெறவுள்ள நான்கு போட்டிகளுடன் நிறைவடையவுள்ளன.

இன்று நடைபெறவுள்ள போட்டிகள் பிரேஸில், சுவிட்சர்லாந்து, போர்த்துக்கல், உருகுவே ஆகிய அணிகளக்கு தீர்மானம் மிக்கவையாக அமையவுள்ளன.

5 தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலை  ஜீ குழுவுக்கான முதல் சுற்றின்  இரண்டாம் கட்டப் போட்டியில் சுவிட்சர்லாந்து சந்திக்கவுள்ளது.

இப் போட்டி இன்று ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் இன்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பிரேஸில், சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு அணிகளும் தத்தமது முதலாம் கட்டப் போட்டிகளில் முறையே சேர்பியாவையும் கெமறூனையும் வெற்றிகொண்டு தலா 3 புள்ளிகளைப் பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி 16 அணிகள் நொக் - அவுட் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

ஒருவேளை இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் கடைசிக் கட்டப் போட்டிகளின் முடிவுகளே இந்த இரண்டு அணிகளின் நோக் - அவுட் சுற்றுக்கான தகுதியை உறுதி செய்யும்.

பிரேஸில் அணியின் நட்சத்திர வீரர் நேமார் உபாதைக்குள்ளாகி உள்ளதால் அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கெமறூன் எதிர் சேர்பியா

ஜீ குழுவில் இடம்பெறும் கெமறூனுக்கும் சேர்பியாவுக்கும் இடையிலான போட்டி அல் ஜனூப் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளில் எந்த அணி பலம் வாய்ந்தது என்பதை அனுமானிக்க முடியாது. எனினும் உலக கால்பந்தாட்ட தரவரிசையில் 21ஆம் இடத்தில் இருக்கும் சேர்பியா வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாகத் தென்படுகிறது. எனினும் உலக தரவரிசையில் 43ஆம் இடத்தில் இருக்கும் கெமறூனை குறைத்து மதிப்பிட முடியாது.

இந்த இரண்டு அணிகளும் இன்றைய தினம் தத்தமது முதலாவது வெற்றியை ஈட்டுவதற்கு கடுமையாக முயற்சிக்கும் என்பதால் அப் போட்டி கடைசிவரை பரப்பரப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

போர்த்துக்கல் எதிர் உருகுவே

போர்த்துக்கல்லுக்கும் உருகுவேக்கும் இடையிலான மிக முக்கிய எச் குழு போட்டி லுசெய்ல் விளையாட்டரங்கில் இன்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கிறிஸ்டியானோ ரோனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் நொக் - அவுட் சுற்றில் விளையாடுவதை உறுதிசெய்துகொள்ளும்.

கானாவுடனான தனது முதலாவது போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற போர்த்துக்கலுக்கு உருகுவேயுடனான போட்டி இலகுவாக அமையப் போவத்தில்லை.

மறுபுறத்தில் தென் கொரியாவுடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட உருகுவே, இன்றைய போட்டியில் வெற்றிபெறத்தவறினால் அதன் நொக்-அவுட் சுற்று வாய்ப்பு சந்தேகத்திற்கிடமாகிவிடும்.

போர்த்துக்கல்லை விட நெருக்கடிக்கு மத்தியில் இன்றைய போட்டியை எதிர்கொள்ளும் உருகுவே  வெற்றியைக் குறியாகக் கொண்டு விளையாட முயற்சிக்கும் என்பது உறுதி.

தென் கொரியா எதிர் கானா

தென் கொரியாவுக்கும் கானாவுக்கும் இடையிலான எச் குழு போட்டி எட்யூகேஷன் சிட்டி விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உருகுவேயுடனான தனது ஆரம்பப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடிய தென் கொரியா அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தது.

அதேவேளை, போர்த்துக்கல்லுக்கு எதிரான போட்டியில் கானா தோல்வி அடைந்த போதிலும் அவ்வணி கடைசிவரை போராடியிருந்தது.

உலக கால்பந்தாட்ட தரவரிசையில் தென் கொரியா 28ஆவது இடத்திலும் கானா 43ஆவது இடத்திலும் இருக்கின்றன. எனினும் இந்த இரண்டு அணிகளும் தத்தமது முதல் போட்டிகளில் போன்று மீண்டும் திறமையை வெளிப்படுத்தினால் இந்தப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக அமையும் என்பது உறுதி.

ஜீ மற்றும் எச் குழுக்களில் அணிகளின் நிலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20