காரைநகரில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

28 Nov, 2022 | 01:18 PM
image

காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/44 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 44 குடும்பங்களுக்கு சொந்தமான 11 ஏக்கர் காணிகளை இராணுவத்திற்கு அளவிடுவதற்கு அப்பகுதி மக்கள் இன்று (28) பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணியை அளவிடுவதற்கு வந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பையடுத்து அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் சொந்த காணிகள் இல்லாமல் வாடகை வீடுகளில் இருந்து மழையிலும் தண்ணீரிலும் அல்லல்படுகின்றோம். எங்களது நிலையை கருத்தில் கொள்ளாது இராணுவத்தினருக்கு காணி அளவிடுவதற்கு முயற்சிக்கின்றனர். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அண்மையில் வடக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களது காணிகளை மக்களுக்கே வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இது இவ்வாறு இருக்கு நில அளவை திணைக்களத்தினர் இன்றையதினமும் காணி அளவீட்டிற்கு வருகைதந்திருக்கின்றனர்.

காரைநகர் பிரதேச செயலர் தமக்கு காணி அளவிடுமாறு அறிவித்தல் வழங்கிய நிலையிலேயே தாங்கள் காணி அளவிடுவதற்கு வருகை தந்ததாக நில அளவை திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடருமானால் எங்களது போராட்டங்களும் தொடரும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டத்தில் காணியின் உரிமையாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், சமூகமட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு முன்னோடியான விஞ்ஞாபன ஒப்பீட்டு முயற்சி...

2024-09-17 13:51:00
news-image

17 இலட்சம் பெறுமதியுடைய 220 கிராம்...

2024-09-17 13:37:36
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-17 13:42:02
news-image

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு...

2024-09-17 13:43:21
news-image

பேரினவாதிகளுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்த தமிழர்கள்...

2024-09-17 13:56:02
news-image

கஜமுத்து, முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற...

2024-09-17 12:12:50
news-image

பொலிஸ் அதிகாரிகள் மீது பசையை கொட்டிவிட்டு...

2024-09-17 12:45:25
news-image

சக ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால்...

2024-09-17 12:07:43
news-image

வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன்...

2024-09-17 13:36:44
news-image

ஜனாதிபதி தேர்தல் ; சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட...

2024-09-17 12:07:12
news-image

200 ஆவது தேர்தல் கண்காணிப்பு பணிகளில்...

2024-09-17 12:46:10
news-image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 17,140,354...

2024-09-17 11:19:22