நோயாளியை பார்க்கச் சென்றவர் மீது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்குதல் - யாழ். போதனாவில் சம்பவம்

By Digital Desk 5

28 Nov, 2022 | 01:56 PM
image

( எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்ற இருவர்  மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவாக இணைந்து தாக்குதல் நடத்தியதால் ஒருவர் காயமடைந்து  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் .

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்து சம்பவம் தொடர்பில்  தெரிய வருவதாவது,

கடந்த   26 ஆம் திகதி மதியம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமது தாயாரை பார்ப்பதற்காக இருவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன் போது ஒருவர் மட்டுமே வைத்தியசாலை விடுதிக்குள் சென்று நோயாளரை பார்வையிட முடியும் என பாதுகாப்பு உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏன் பாரபட்சமாக நடக்கிறீர்கள் - வேறு நோயாளியை பார்ப்பதற்கு ஒரே நேரத்தில் பல பார்வையாளர்களை அனுமதித்தீர்களே என தெரிவித்து நோயாளியை பார்க்கச் சென்றவர் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஒன்றுகூடிய வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த அரச ஊழியர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம்  தொடர்பாக பொஙிசார் விசாரணை மேற்கொண்டுவருவதுடன் ,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் குழு ஒன்றை அமைத்து விசாரணை  மேற்கொண்டு வருவதாக  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09