தம்பலகாமம் பிரதேச சாகித்திய விழா

By Nanthini

28 Nov, 2022 | 01:44 PM
image

ம்பலகாமம் பிரதேச சாகித்திய விழா நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை (நவ 26) தம்பலகாமம் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சாகித்திய அதிகார சபையின் ஏற்பாட்டில் தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார "மூவின மக்களும் செறிந்து வாழக்கூடிய இப்பிரதேசத்தில் அனைவரையும் இணைத்து இவ்விழாவினை ஏற்பாடு செய்தமை வரவேற்கத்தக்கது.

இவ்வாறான விழாக்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட ஏதுவாக அமையும்" என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம உரையாற்றுகையில், 

"பாரம்பரிய கலை கலாசார அம்சங்கள் அருகி வரும்போது அதனை மீள உயிர்ப்பிப்பதற்காக வருடத்துக்கு ஒரு தடவையேனும், இவ்வாறான கலாசார நிகழ்வுகளை நடாத்துவது சிறப்புக்குரியது. 

அத்துடன் அனேகமான பாடசாலை மாணவர்கள் பிரதேச மட்ட போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை  பெற்றுக்கொண்டுள்ளனர். இது நல்லதொரு திருப்புமுனையாகும். காரணம், தற்போதைய சூழ்நிலையில் சமூக ஊடகங்களின் பாவனை காரணமாக பாரம்பரிய அம்சங்கள், எழுத்தாற்றல், ஆக்கத்திறன் என்பன எம்மை விட்டு தூரமாகிச் செல்கின்றன. அவ்வாறானதொரு நிலையில் சிறுவர்களின் இலக்கியம் தொடர்பான ஆர்வம் இத்துறை தொடர்பான வளர்ச்சிக்கு வலு சேர்க்கும்" என்று தெரிவித்தார். 

இதன்போது தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெ. ஸ்ரீபதி உரையாற்றுகையில்,

"பல இயற்கை வளங்களை கொண்ட ரம்மியமான பிரதேசமே தம்பலகாமம். எம்மவர் மத்தியில் நிலவிய பல பாரம்பரிய கலாசார அம்சங்கள் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய சமூகத்தினர் மத்தியில் அருகி வருகின்றது. எனவே, பாரம்பரிய அம்சங்களை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச இலக்கிய பேரவை இணைந்து  'ஏர் முனை' சஞ்சிகையின் மூன்றாவது வெளியீட்டை வெளியிட்டதுடன், பிரதேச மட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை பிரதம அதிதி, கெளரவ அதிதி, பிரதேச செயலாளர்  உள்ளிட்ட அதிகாரிகளின் ஊடாக வழங்கினர். 

அத்துடன் இந்நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சர்வமத தலைவர்கள், கலைஞர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58
news-image

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப்பெருமஞ்ச...

2023-02-06 11:36:18
news-image

இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு...

2023-02-06 11:13:02
news-image

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை...

2023-02-04 18:36:27
news-image

யாழில் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்  

2023-02-04 18:35:59
news-image

தியாகராஜர் கலைக்கோயில் மாணவி பிரியங்கா குகப்ரியாவின்...

2023-02-04 18:35:17
news-image

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்ய சாய் சேவா...

2023-02-04 18:34:43
news-image

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு...

2023-02-04 18:23:12
news-image

இலங்கையில் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா...

2023-02-04 13:49:11