சோமாலியாவிலுள்ள ஹோட்டலொன்றை முற்றுகையிட்டுள்ள தீவிரவாதிகளுடன் அந்நாட்டுப் படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தலைநகர் கெமாகாடிஷுவிலுள்ள வில்லா ரோஸ் ஹோட்டல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். இரு தற்கொலை குண்டுவெடிப்புகளுடன தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்பின் ஆயுதமேந்திய அல் ஷபாப் அங்கதவர்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.
அதையடுத்து தீவிரவாதிகள் மீது அரச படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல மணித்தியாலங்களாக இம்மோதல் நீடித்து வருகிறது.
இத்தாக்குதல் ஆரம்பித்தபோது அரச அதிகாரிகள் பலர் மேற்படி ஹோட்டலில் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சோமாலிய ஜனாதிபதி மாளிகை மற்றும் முக்கிய அரச நிறுவனங்களிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்துக்குள் இந்த ஹோட்டல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM