மில்ரோய் பெரேரா ஞாபகார்த்த கால்பந்தாட்டம் : பென்ஸ், பீட்ஸ் அணிகள்  வெற்றிகளை பகிர்ந்தன

By Digital Desk 2

28 Nov, 2022 | 02:41 PM
image

(நெவில் அன்தனி)

பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மில்ரோய் பெரேரா ஞாபகார்த்த கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் புனித பெனடிக்ட் பழைய மாணவர்கள் அணியும் புனித பேதுருவானர் பழைய மாணவர்கள் அணியும் வெற்றியுடன் கூடிய பெருமையை பகிர்ந்துகொண்டன.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் ஓல்ட் பீட்ஸ் வெட்டரன்ஸ் அணியை 3 - 1 என்ற பெனல்டி அடிப்படையில் ஓல்ட் பென்ஸ் வெட்டரன்ஸ் அணியும் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் ஓல்ட் பென்ஸ் அணியை 4 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் ஓல்ட் பீட்ஸ் அணியும் வெற்றிகொண்டு மில்ரோய் பெரேரா ஞாபகார்த்த கிண்ணங்களை சுவீகரித்தன.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பிரதான கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் வேட்டரன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும்  பழைய மாணவர்களுக்கு இடையிலான போட்டியும்  கால்பந்தாட்டப் பிரியர்களைப் பரவசத்தில் ஆழ்த்தின.

பம்பலப்பிட்டி புனித பேதுருவானர் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப் போட்டிகளை இரண்டு கல்லூரிகளினதும் பழைய மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கண்டு களித்து தத்தமது அணிகளை உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

முதலில் நடைபெற்ற ஓல்ட் பென்ஸ் வெட்டரன்ஸ் அணிக்கும் ஓல்ட் பீட்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி 1 - 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

ஓல்ட் பென்ஸ் வெட்டரன்ஸ் சார்பாக மஹேஷ் செல்வரட்னமும் ஓல்ட் பீட்ஸ் வெட்டரன்ஸ் சார்பாக இசுறு பெரேராவும் கோல்களைப் புகுத்தினர்.

இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பெனல்டிகளில் ஓல்ட் பென்ஸ் வெட்டரன்ஸ் 3 - 1 என வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

கோல்காப்பாளர் லலன்த குமார 2 பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தியதன் பலனாகவே ஓல்ட் பென்ஸ் வெட்டரன்ஸ் அணி வெற்றிபெற்றது.

இப் பிரிவில் ஓல்ட் பென்ஸ் சார்பாக லலன்த குமாரவும் ஓல்ட் பீட்ஸ் சார்பாக இசுறு பெரேராவும் சிறந்த வீரர்களாகத் தெரிவாகினர்.

ஆட்டநாயகன் விருதை ஓல்ட் பென்ஸ் வெட்டரன்ஸ் வீரர் மஹேஷ் செல்வரட்னம் வென்றெடுத்தார்.

ஓல்ட் பீட்ஸ் இலகுவான வெற்றி

40 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் ஓல்ட் பென்ஸ் கழகத்தை 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஓல்ட் பீட்ஸ் வெற்றிகொண்டது.

போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய ஓல்ட் பென்ஸ் 14ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் சமீர கிரிஷான்த போட்ட பெனல்டி கோல் மூலம் முன்னிலை அடைந்தது.

அதன் பின்னர் ஓல்ட் பென்ஸ் வீரர்களின் ஆற்றல் மங்கத் தொடங்கியதுடன் ஓல்ட் பீட்ஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.

போட்டியின் 23ஆவது நிமிடத்தில் ஓல்ட் பீட்ஸ் சார்பாக தேசிய வீரர் ஷபீர் ரசூனியா கோல் நிலையை சமப்படுத்தினார்.

5 நிமிடங்கள் கழித்து ரசூனியா 2ஆவது கோலைப் போட்டு ஓல்ட் பீட்ஸ் அணியை முன்னிலையில் இட்டார்.

இடைவேளைக்கு 5 நிமிடங்கள் இருந்தபோது முன்னாள் தேசிய வீரர் சுந்தரராஜ் நிரேஷ் அலாதியான கோல் ஒன்றைப் போட ஓல்ட் பீட்ஸ் 3 - 1  என முன்னிலை அடைந்தது.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த சொற்ப நேரத்தில் 22 யார் தூர ப்றீ கிக் மூலம் சுந்தராஜ் நிரேஷ் மீண்டும் ஒரு அற்புதமான கோல் போட்டு அசத்தினார்.

58ஆவது நிமிடத்தில் ஓல்ட் பென்ஸ் சார்பாக சமீர கிரிஷான்த கோல் போட ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் கோல் போட ஓல்ட் பென்ஸ் கடுமையாக முயற்சித்தது. ஆனால், ஓல்ட் பீட்ஸ் 4 - 2 என வெற்றி பெற்றது.

இப் பிரிவில் ஓல்ட் பென்ஸ் சார்பாக மலிந்த நிமன்தவும் ஓல்ட் பீட்ஸ் சார்பாக ஷபீர் ரசூனியாவும் சிறந்த வீரர்களாகத் தெரிவாகினர்.

ஆட்டநாயகன் விருது சுந்தரராஜ் நிரேஷுக்கு வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கி பூகம்பத்தில் கால்பந்தாட்ட வீரர் பலி

2023-02-08 11:23:55
news-image

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஆரோன்...

2023-02-07 15:23:16
news-image

இருபதுக்கு 20 உலகக் கிண்ண பயிற்சிப்...

2023-02-07 15:35:37
news-image

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்துக்கு  சவூதி...

2023-02-07 14:42:05
news-image

இரட்டைச் சதம் விளாசிய சந்தர்போலின் மகன்...

2023-02-07 15:01:00
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கான 33 வருட ஆரம்ப...

2023-02-07 14:07:13
news-image

முதல் சுற்றுடன் வெளியேறினார் சானியா

2023-02-07 11:50:49
news-image

6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட...

2023-02-07 11:25:04
news-image

அனைவருக்கும் ஆசிய விளையாட்டு விழா என்பதை...

2023-02-07 09:59:15
news-image

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட இறுதியில் 76ers, ஓல்ட்...

2023-02-06 21:15:15
news-image

சர்வதேச போட்டிகளில் நடுநிலை வீரர்களாக  பங்குபற்ற...

2023-02-06 16:46:25
news-image

பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் தமிழ்...

2023-02-06 14:53:21