அரசாங்க உற்சவத்திற்கோ அல்லது நிகழ்விற்கோ அரச நிதியைப் பயன்படுத்தக் கூடாது - திறைசேரியின் செயலாளர்

By Digital Desk 2

28 Nov, 2022 | 01:39 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமைச்சுக்கள் , திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், மாகாணசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச வங்கிகள் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு உற்சவம் அல்லது நிகழ்விற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு திறைசேரி செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :  

அரச செலவுகளை பாரியளவில் கட்டுப்படுத்தும் இலக்கில் 03ஃ2022 ஆம் இலக்க 2022.04.26 அன்று வெளியிடப்பட்ட தேசிய வரவு - செலவுத் திட்ட சுற்று நிரூபத்தில் அரச நிறுவனங்களினால் நடத்தப்படும் உற்சவங்கள் , திறப்பு விழாக்கள், கருத்தரங்குகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்றதும் மற்றும் பிரதானமற்றதுமான செலவுகளைக் கைவிடுவதோடு , அவற்றுக்கு அரச நிதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நிச்சயம் பின்பற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய , ஜனாதிபதி செயலாளரினால் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி புதிய சுற்று நிரூபத்தின் மூலம் இவ்விடயம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அதே போன்று ஆகஸ்ட் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்திற்கமைய உற்சவங்கள் ஏனைய வைபவங்களுக்கான செலவுகளைக் கைவிடுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தவிர வெ வ்வேறு உற்சவங்களுக்காக அரச நிறுவனங்களினால் அரச நிதி செலவிடப்படுகின்றமை தொடர்பில் டந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிப்பினும் இந்த சுற்று நிரூபங்களுக்கு முரணாக தற்போதும் அரச செலவில் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

எனவே சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், மாகாணசபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச வங்கிகள் உள்ளிட்டவற்றில் அரச உத்தியோகத்தர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றல் அல்லது ஓய்வு பெறுதல் உள்ளிட்டவற்றுக்காக அரச நிதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09